டிஜிட்டல் முறையில் மீண்டும் வெளிவருகிறது கமல் நடித்த ஆளவந்தான்: தாணு அறிவிப்பு

இன்றைய மதிப்பில் ரூ. 400 கோடி செலவில் உருவான கமல் நடித்த ஆளவந்தான் படம் டிஜிட்டல் முறையில் மீண்டும் வெளிவரும் என்று...
டிஜிட்டல் முறையில் மீண்டும் வெளிவருகிறது கமல் நடித்த ஆளவந்தான்: தாணு அறிவிப்பு

தயாரிப்பாளர் தாணு இன்று வெளியிட்ட அறிவிப்பு பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

2000-ம் ஆண்டில் இன்றைய மதிப்பில் ரூ. 400 கோடி செலவில் உருவான கமல் நடித்த ஆளவந்தான் படம் டிஜிட்டல் முறையில் மீண்டும் வெளிவரும் என்று அறிவித்துள்ளார். கடந்த வருடம் அமெரிக்கப் படவிழா ஒன்றில் ஆளவந்தான் படத்துக்கு அதிக வரவேற்பு கிடைத்ததால் அதையடுத்து இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆளவந்தான் படத்தை இயக்கியவர் சுரேஷ் கிருஷ்ணா. 

இன்று ஆரம்பமாகும் அதன் டிஜிட்டல் பணிகள் விரைவில் முடிவடைந்து 500 திரையரங்குகளில் படம் வெளியிடப்படும் என்றும் அறிவித்துள்ளார் தாணு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com