சச்சின் - ஏ பில்லியன் டிரீம்ஸ்: முதல் வார வசூல் நிலவரம்!

கடந்த வெள்ளியன்று வெளியான சச்சின் - ஏ பில்லியன் டிரீம்ஸ் படம் முதல் வாரத்தில் அபாரமான வசூலைப் பெற்றுள்ளது. 
சச்சின் - ஏ பில்லியன் டிரீம்ஸ்: முதல் வார வசூல் நிலவரம்!

கடந்த வெள்ளியன்று வெளியான சச்சின் - ஏ பில்லியன் டிரீம்ஸ் படம் முதல் வாரத்தில் அபாரமான வசூலைப் பெற்றுள்ளது. 

ஹிந்தி, மராத்தி, தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியான இந்தப் படம், வழக்கமான திரைப்படம் கிடையாது. ஆவணப்படப் பாணியில் உருவாக்கப்பட்ட வாழ்க்கை வரலாற்றுப் படம்.  

முதல் நாளன்று இந்தியா முழுக்க ரூ. 8.40 கோடி வசூலித்தது. வார இறுதி நாள்களான முதல் மூன்று நாள்களில்  ரூ. 28 கோடி வசூலித்த இந்தப் படம் முதல் வாரத்தில் ரூ.41.20 கோடி வசூலித்துள்ளது. 

முதல் வாரத்தில் சச்சின் படத்துக்குக் கிடைத்த வசூல் விவரங்கள்:

ஹிந்தி - ரூ. 35.99 கோடி, மராத்தி - ரூ. 1.67 கோடி, தமிழ் - ரூ. 1.40 கோடி, தெலுங்கு - ரூ. 1.58 கோடி, ஆங்கிலம் -  ரூ. 56 லட்சம். மொத்தம் - ரூ. 41.20 கோடி.

ஜேம்ஸ் ஏர்ஸ்கின் இயக்கியுள்ள இந்தப் படத்தை, 200 நாட் அவுட் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இசை - ஏ.ஆர். ரஹ்மான். சச்சினின் 24 வருட கிரிக்கெட் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் இந்தப் படத்தில் சச்சின், கங்குலி, வீரேந்திர சேவாக் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளார்கள். குறிப்பாக, சிறு வயது சச்சினாக நடித்துள்ளது, சச்சினின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர்.

சச்சினின் பிறப்பு முதல் இந்தியாவுக்கான அவர் களம் புகுந்த மைதானம், வெற்றி, தோல்வி, காதல், திருமணம் என எல்லாவற்றையும் பிரபதிபலிக்கும் வகையில் இப்படம் உருவாகப்பட்டுள்ளது. தோனி மற்றும் சேவாக் போன்றோரும் இந்த பயோகிராஃபியில் இடம்பெற்று, சச்சினைப் பற்றி சிலாகித்துள்ளார்கள். கிரிக்கெட்டில் ஜென்டில்மேன் எனவும் மிஸ்டர் கிரிக்கெட் எனவும் போற்றப்படும் சச்சின், சிறுவயதில் குறும்புத்தனத்துக்குப் பஞ்சம் வைக்காத பலே கில்லாடி. அந்த சம்பவங்கள் அனைத்தும் மிக யதார்த்தமாக இப்படத்தில் கொண்டு வரப்பட்டுள்ளன.

சச்சின் படம் இந்தியாவில் 2400 திரையரங்குகளிலும் வெளிநாடுகளில் 400 திரையரங்குகளிலும் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com