இளைய சூப்பர் ஸ்டார் பட்டம்: சிவகார்த்திகேயன் அவசர மறுப்பு!

இதைக் கேட்கும்போது, இதெல்லாம் பத்தாது, இன்னும் ஓடு என்று மட்டும் தோன்றுகிறது...
இளைய சூப்பர் ஸ்டார் பட்டம்: சிவகார்த்திகேயன் அவசர மறுப்பு!

நடிகர் தம்பிராமையாவின் மகன் உமாபதி கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள படம் - அதாகப்பட்டது மகாஜனங்களே. இமான் இசையமைத்துள்ள இப்படத்தை இயக்கியுள்ளவர், இன்பசேகர். கதாநாயகியாக ரேஷ்மா ரத்தோர் நடித்துள்ளார். 

இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

இந்த விழாவில் பேசிய தயாரிப்பாளர் பி.டி. செல்வகுமார், சிவகார்த்திகேயன் படங்களுக்கு குழந்தைகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடையேயும் நல்ல வரவேற்பு உள்ளது. எனவே அவர் தமிழ்ப்பட உலகின் இளைய இளம் சூப்பர் ஸ்டார் என்றழைத்தார். நடிகர் எஸ்.வி.சேகர் பேசியபோது, சிவகார்த்திகேயனை இளைய சூப்பர் ஸ்டார் என்று அழைத்தால் ரஜினி கோபித்துக்கொள்ளமாட்டார் என்றார்.  அதேபோல இயக்குநர் பேரரசு, மக்கள் ஸ்டார் என்று தன் பங்குக்கு சிவகார்த்திகேயனைப் புகழ்ந்தார்.

இதையடுத்துப் பேசவந்த சிவகார்த்திகேயன் கூறியதாவது: 

பி.டி. செல்வகுமார் என்ன பேசினார் என்பதை என் வாயால் சொல்லமாட்டேன். எனக்கு எந்தப் பட்டங்களும் வேண்டாம். தயவு செய்து எந்தவொரு பட்டப்பெயரைச் சூட்டியும் என்னை அழைக்கவேண்டாம். நான் சினிமாவைப் புரிந்துகொண்டதாக இயக்குநர் பேரரசு கூறினார். ஆனால் நான் வாழ்க்கையைப் புரிந்துகொண்டேன்.

எங்கேயிருந்து வந்துள்ளேன் என்பது எனக்குத் தெரியும். அதனால் யார் என்ன பேசினாலும் காதில் போட்டுக்கொள்ளமாட்டேன். ஆகவே எனக்கு இந்தப் பட்டம் எல்லாம் வேண்டாம். இந்தப் பட்டத்தை எனக்கு அளித்தீர்கள் என்பது அதற்குள் செய்தியாக வந்துவிட்டது. எனக்கென்று ஒரு வழியைத் தேர்ந்தெடுத்து அதில் போய்க்கொண்டிருக்கிறேன். என் படங்களால் மக்களைச் சந்தோஷப்படுத்தினால் போதும். 

கே.எஸ். ரவிக்குமார், முத்து படத்தை 45 நாள்களில் முடித்தோம் என்றார். எனக்கும் அதுபோல வேகமாகப் படத்தை முடிக்க ஆசைதான். ஆனால், 100 நாள்கள் ஆகிவிடுகின்றன. முன்பு படப்பிடிப்பை 45 நாள்களில் முடித்து படத்தை 100 நாள்கள் ஓட்டுவார்கள். இன்று 25 படம் ஓடினாலே வெற்றி என்பதால் படப்பிடிப்பை 100 நாள்கள் வைத்துக்கொண்டிருக்கிறோம். குறைந்த நாள்களில் படப்பிடிப்பை முடிப்பது எப்படி என்று கே.எஸ். ரவிக்குமார் சார் இனிவரும் இயக்குநர்களுக்குப் பாடம் எடுக்கவேண்டும். 

என்னை நிறைய பாராட்டியுள்ளார்கள். இதைக் கேட்கும்போது, இதெல்லாம் பத்தாது, இன்னும் ஓடு என்று மட்டும் தோன்றுகிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com