5 வயது குழந்தை முதல் 75 வயது பெரியவர்கள் வரை ரசிக்கக் கூடிய படம் 'மரகத நாணயம்'

சிறப்பாக உருவாக்கப்பட்ட எந்த ஒரு சாகச மற்றும் கற்பனை திரைப்படம் மொழி, கலாச்சாரம்
5 வயது குழந்தை முதல் 75 வயது பெரியவர்கள் வரை ரசிக்கக் கூடிய படம் 'மரகத நாணயம்'

சிறப்பாக உருவாக்கப்பட்ட எந்த ஒரு சாகச மற்றும் கற்பனை திரைப்படம் மொழி, கலாச்சாரம் மற்றும் காலம் கடந்தும் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படும். அந்த மாதிரி ஒரு சாகசம் மற்றும் காமெடி கலந்த கற்பனைத் திரைப்படம் தான் மரகத நாணயம்.  மரகத நாணயம் என்பதை விட ஆர்வத்தை தூண்டும் ஒரு தமிழ் படத்தலைப்பு இருக்க முடியாது. இந்த சாகசம் மற்றும் காமெடி கலந்த கற்பனைத் திரைப்படம் நல்ல பல திறமையான நடிகர்களையும், தொழில்நுட்ப கலைஞர்களையும் உள்ளடக்கியுள்ளது. ஆதி, நிக்கி கல்ராணி, ஆனந்த் ராஜ், டேனியல், ராம்தாஸ், அருண்ராஜா காமராஜ் என திறமையான நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை உள்ளடக்கியுள்ள இந்த படத்தை ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் டில்லி பாபு தயாரிக்க, அறிமுக இயக்குனர் ஏஆர்கே சரவணன் இயக்கியிருக்கிறார். 

’இந்த மரகத நாணயம் எல்லா தரப்பு ரசிகர்களுக்காகவும் எடுக்கப்பட்ட படம். சுருக்கமாக 5 வயது குழந்தை முதல் 75 வயது பெரியவர்கள் வரை ரசிக்க கூடிய படம். ரசிகர்கள் இந்த படத்தை விரும்பி ரசிப்பதோடு, இதன் கதை மற்றும் திரைக்கதையையும் பாராட்டுவார்கள் என உறுதியாக நம்புகிறேன். வணிக வட்டாரத்தில் நல்ல வரவேற்பையும், எதிர்பார்ப்பையும் பெற்றுள்ள இந்த ஃபேண்டஸி படத்தில் காமெடி முக்கிய பங்கு வகிக்கும். மொத்த படக்குழுவும் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் மும்முரமாக இருக்கிறோம்.

மரகத நாணயம் ஜூன் 16 ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாக இருப்பதால் மொத்த குழுவும் உற்சாகமாகவும், எதிர்பார்ப்போடும் காத்திருக்கிறோம்' என தன்னம்பிக்கையோடு கூறுகிறார் படத்தின் நாயகன் ஆதி.

படத்தின் நாயகியும், முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் இளம் நாயகியுமான நிக்கி கல்ராணி கூறும்போது, 'மரகத நாணயம் என்னை மிகவும் கவர்ந்து விட்டது. படத்தின் ரிலீஸை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன். சிறு வயதிலிருந்தே நான் விரும்பி, ரசித்து பார்க்கும் ஃபேண்டஸி வகைப் படங்களில் நானும் நடித்திருக்கிறேன் என நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாகவும், வானத்தில் பறப்பது போலவும் உணர்கிறேன். என் கதாப்பாத்திரம் மிகவும் புதுமையாக இருக்கும். நல்ல திரைக்கதை மற்றும் கதை சொல்லலுடன் சிறப்பாக உருவாகி இருக்கும் இப்படத்தை ரசிகர்கள் மிகவும் ரசிப்பதோடு,  அவர்களின் பாராட்டு மற்றும் ஆதரவையும் மரகத நாணயம் படக்குழுவுக்கு வழங்குவார்கள் என நம்புகிறேன்'  என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com