'மாரி’திரைப்பட இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கும் புதிய இணையத் தொடர்!

இந்த ஆண்டில் முன்று இணைய தொடர்களை வெளியிட இருக்கும் ட்ரெண்ட்லௌடு,
'மாரி’திரைப்பட இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கும் புதிய இணையத் தொடர்!

தமிழ்நாட்டின் முன்னணி டிஜிட்டல் மார்க்கெட் நிறுவனமும், விஷன் டைம் நிறுவனத்தின் ஒரு பிரிவுமான ட்ரெண்ட்லௌட்,  உருவாக்கியுள்ள 'As i am Suffering from Kadhal' என்ற இணையதள தொடரை முன்னணி ஆப் சேவையான ஹாட் ஸ்டாரில் இன்று வெளியிடுகிறது. மாரி, வாயை மூடி பேசவும், காதலில் சொதப்புவது எப்படி போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் பாலாஜி மோகன் ட்ரெண்ட்லௌட் உடன் இணைந்து தன் நிறுவனமான ஓபன் விண்டோ மூலம் தயாரித்திருக்கிறார். சமகாலத்தில் இருக்கும் காதல் கதைகளையும், அவற்றின் எண்ணற்ற வகைகளையும், அவற்றை சுற்றியும் பின்னப்பட்டுள்ள இந்த தொடர் மொத்தம் 10 பாகங்களை கொண்டது. மூன்று இளம் தம்பதிகள், ஒரு விவாகரத்து பெற்ற மனிதன் அவரது 8 வயது மகள் தான் கதையின் கதாபாத்திரங்கள். 

பல்வேறு கதாபாத்திரங்கள் மூலம் காதலில் ஒருவருடைய அனுபவங்கள், காதலின் மயக்கம் எப்படி போகப்போக விரக்தியாக மாறுகிறது என்பதை இந்த தொடரில் காமெடியாகாவும் சொல்லியிருக்கிறார். காதலில் விழுவது எளிது, காதலில் இருப்பது கடினம். என்ன தான் காதலில் நல்ல அனுபவங்கள் கிடைக்கவில்லை என்றாலும் மீண்டும் மீண்டும் முடிவில்லா நம்பிக்கையோடு காதலில் மனிதன் முயற்சிப்பது என்னை கவர்ந்த விஷயம். இதை குறும்படம், சினிமாவை தொடர்ந்து இதே விஷயத்தை ஒரு தொடரில் சொல்ல முயற்சித்திருக்கிறேன். மிகவும் ஜாலியான இந்த தொடரில் உங்களை நீங்கள் தொடர்புபடுத்திக் கொள்ள முடியும், உங்கள் உறவை பற்றி மறுபடியும் சிந்திக்க வைக்கும். 

சினிமாவை விட டிஜிட்டல் வினியோக முறை  என்பது இன்னும் சிறப்பானது. எங்களுடனே பயணித்து, எங்கள் உழைப்பை ட்ரெண்ட்லௌட் கண்ணால் பார்த்தது எங்களுக்கு சந்தோஷம். ஹாட் ஸ்டாரை விட சிறந்த முறையில் இந்த தொடரை கொண்டு சேர்க்க யாராலும் முடியாது. என்னுடைய கனவை சரியான விதத்தில் கொண்டு சேர்ப்பதில் அவர்கள் உறுதியோடு இருப்பது சந்தோஷம் என்கிறார் இயக்குனர் பாலாஜி மோகன்.

'ஒரே தொடரில் ஹாட் ஸ்டார் மற்றும் பாலாஜி மோகன் ஆகிய இருவரோடும் இணைவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இருவரும் பல விஷயங்களில் ஒத்து போனவர்கள் தான். நகர மக்களுக்கு ஏற்ற நல்ல சிறந்த வீடியோக்களை உருவாக்குவதிலும், சமகால கதைகளை எடுத்து சரியான மக்களுக்கு கொடுப்பதிலும் வல்லவர்கள். ட்ரெண்ட்லௌடு நல்ல வீடியோக்களை உருவாக்குவதிலும், அவற்றை சரியான முறையில் வினியோகித்து கொண்டு சேர்ப்பதிலும் புது உத்திகளை கையாண்டு வருகிறது. இளைஞர்களை இழுக்கும் ஃபேர் & ஹேண்ட்சம் எங்களோடு இணைத்து கொண்டுள்ளதும் எங்களுக்கு கூடுதல் மதிப்பு சேர்க்கும். இன்னும் சில தொடர்களும் இந்த ஆண்டு வெளியாக இருக்கிறது, எங்களுக்கு இது ஒரு சிறப்பான தொடக்கமாக அமைந்திருக்கிறது' என்கிறார் ட்ரெண்ட்லௌடு சிஇஓ சிதம்பரம் நடேசன்.

'ஒட்டுமொத்த தொடருக்கும் டைட்டில் ஸ்பான்சராக இருக்க ஒப்பந்தமாகியிருக்கும் ஃபேர் & ஹேண்ட்சம் கருத்துகளுக்கும் மதிப்பளிக்கிறோம். எங்களின் விவாதத்தில் இந்த நாட்டின் இளைஞர்களுக்கு உண்மையான, சமகாலத்திய நல்ல கதைகள் கிடைக்காத பஞ்சம் இருப்பது தெரிந்தது. அவற்றை போக்கும் வகையில் இந்த தொடரை கொண்டு வந்திருக்கிறோம். எங்களின் உண்மையான தமிழ்நாட்டு ரசிகர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள் தமிழில், கொடுப்பது போன்று பல தனித்துவமான விஷயங்களை கொடுத்து வருகிறோம்' என்கிறார் ஹாட்ஸ்டார் சிஇஓ அஜித் மோகன்.

பாலாஜி மோகன் மற்றும் அவரின் மொத்த குழுவும் ஜூன் 16ஆம் தேதி (இன்று) மாலை 5 மணிக்கு ஃபேஸ்புக்கில் நேரலையில் தோன்றி, இந்த தொடரை பற்றிய ரசிகர்களின் எண்ண ஓட்டங்களையும், எந்த அளவு ரசிகர்களிடம் சென்று சேர்ந்துள்ளது என்றும் தெரிந்து கொள்ள இருக்கின்றனர். ஜூன் 16 ஆம் தேதி ஒரே நேரத்தில் 'As I am Suffering from Kadhal' தொடரின் பத்து பாகங்களையும் ரிலீஸ் செய்கின்றனர். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் இந்த தொடர் ஆங்கில சப்டைட்டிலோடு வெளியாகிறது. 

ட்ரெண்ட்லௌடு நிறுவனம் வீடியோ உருவாக்கம், சினிமா பிரமோஷன், டிஜிடல் மார்க்கெட்டிங் ஆகியவற்றில் முன்னணியில் இருக்கும் ஒரு நிறுவனம். மெட்ராஸ் மீட்டர், ஸ்மைல் சேட்டை, பாரசிட்டமால் பணியாரம் போன்ற யூடியூப் சேனல்களையும் நிர்வகித்து வருகிறது. இதன் ஒரு அங்கமாக இருக்கும் ட்ரெண்ட் மியூசிக் படத்தின் இசை உரிமைகளையும் வாங்கி வினியோகம் செய்கிறது. இந்த ஆண்டில் முன்று இணைய தொடர்களை வெளியிட இருக்கும் ட்ரெண்ட்லௌடு, முக்கிய சில பிரபலங்களோடும் கைகோர்த்து இருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com