ஜூன் 23 வெளியீட்டிலிருந்து பின்வாங்கியது செல்வராகவன் படம்!

ஜுன் 30 அன்று இந்தப் படம் வெளிவரவுள்ளது. அதே நாளில் கெளதம் கார்த்திக் நடிப்பில்...
ஜூன் 23 வெளியீட்டிலிருந்து பின்வாங்கியது செல்வராகவன் படம்!

ஜூன் 23 அன்று சிம்புவின் அஅஅ மற்றும் ஜெயம் ரவி - இயக்குநர் விஜய் கூட்டணியில் உருவாகும் வனமகன் ஆகிய படங்கள் வெளியாகின்றன.

ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் - அன்பானவன், அசராதவன், அடங்காதவன். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தில் ஸ்ரேயா, தமன்னா, சனாகான் போன்றோர் நடித்துள்ளார்கள். சிம்பு 3 விதமான கெட்டப்களில் நடித்துள்ளார். 

பேராண்மை படத்துக்குப் பிறகு மீண்டும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த இளைஞனாக வனமகன் படத்தில் நடிக்கிறார் ஜெயம் ரவி. இவர் ஜோடியாக சாயிஷா சைகல் நடித்துள்ளார். விஜய் தயாரித்து இயக்கும் வனமகன், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் 50-வது படம். இதன் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. வனமகன் படம் மே 12 அன்று முதலில் வெளிவருவதாக இருந்தது. பிறகு மே 19 அன்று வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டது. பிறகு மீண்டும் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் வனமகன் படம் ஜூன் 23-ம் தேதி வெளியாகிறது.

இந்த இரு பெரிய படங்களும் ஒரே நாளில் வெளியாகவுள்ளதால் அன்றைய தினம் வெளியாகவிருந்த செல்வராகவன் இயக்கியுள்ள நெஞ்சம் மறப்பதில்லை படம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூன் அன்று இந்தப் படம் வெளிவரவுள்ளது. அதே நாளில் கெளதம் கார்த்திக் நடிப்பில் இவன் தந்திரன் படமும் வெளிவருகிறது.

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள படம் - நெஞ்சம் மறப்பதில்லை. நந்திதா, ரெஜினா ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்தப் படத்துக்குத் தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. முதலில் ஏ சான்றிதழ் தான் கிடைத்தது. ஆனால் இதை எதிர்த்து மறு தணிக்கைக்கு அனுப்பினார்கள். அதில் யு/ஏ கிடைத்தது.

ஒரு வார இடைவெளியில் 4 முக்கியமான படங்கள் வெளிவருவதால் இந்தப் படங்களுக்குச் சரியான திரையரங்குகளையும் காட்சிகளையும் ஒதுக்குவது கடும் சவாலாக இருக்கும் என்றறியப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com