
ட்விட்டரில் டாப் 25-ல் இடம்பிடித்துள்ள ஒரே தமிழர்!
By எழில் | Published on : 19th June 2017 04:01 PM | அ+அ அ- |

ட்விட்டரில் பிரபல பாடகி கேடி பெரியை உலகளவில் 100 மில்லியன் அதாவது 10 கோடி பேர் பின்தொடர்கிறார்கள் (ஃபாலோயர்ஸ்). ட்விட்டரில் 10 கோடி ரசிகர்கள் என்கிற எண்ணிக்கையை முதலில் தொட்ட பிரபலம் என்கிற பெருமையை அவர் அடைந்துள்ளார். ட்விட்டரில் அதிக எண்ணிக்கையில் ஃபாலோயர்ஸைக் கொண்டுள்ளவரும் அவர்தான். இவருக்குப் பிறகுதான் ஜஸ்டின் பைபர் (9.67 கோடி), ஒபாமா (9.1 கோடி) ஆகியோர் உள்ளார்கள்.
இதையடுத்து இந்திய அளவில் ட்விட்டரில் அதிகம் பேர் பின்தொடரும் பிரபலம் யார் என்கிற கணக்கெடுப்பில் முதல் இடத்தில் உள்ளார் பிரதமர் மோடி. 3 கோடியே 7 லட்சம் ஃபாலோயர்ஸ். உலகளவில் மோடி 35-வது இடத்தில் உள்ளார்.
2-வது இடத்தில் அமிதாப் பச்சனும் மூன்றாம் இடத்தில் ஷாருக் கானும் உள்ளார்கள். முதல் 15 பேரில் உள்ள ஒரே தமிழர் - ஏ.ஆர். ரஹ்மான். அவர் 1 கோடியே 45 லட்சம் ஃபாலோயர்ஸுடன் 13-ம் இடத்தில் உள்ளார். முதல் 25 இடங்களில் ஒரே தமிழரும் ரஹ்மான் தான்.
அதிக ஃபாலோயர்ஸ் கொண்ட கிரிக்கெட் வீரர்களில் முதலிடத்தில் உள்ளவர் சச்சின். 1 கோடியே 65 லட்சம் ஃபாலோயர்ஸ். தமிழக வீரர் அஸ்வின் கிட்டத்தட்ட 45 லட்சம் ஃபாலோயர்ஸுடன் 7-ம் இடத்தில் உள்ளார்.