சங்கராபரணம் விருது பெறும் அமீர் கான், தனுஷ், ஜூனியர் என்.டி.ஆர்.!

இசை கே.வி. மகாதேவன், ஒளிப்பதிவு பாலுமகேந்திரா, என ஜாம்பவான்கள் பங்கு பெற்ற இந்த திரைப்படத்தின் பெருமைக்குரிய நினைவைக் கொண்டாடும் வகையில் நடிகை துளசி ‘சங்கராபரணம் விருதுகள்’ என்ற பெயரில்
சங்கராபரணம் விருது பெறும் அமீர் கான், தனுஷ், ஜூனியர் என்.டி.ஆர்.!

'சங்கராபரணம்' கர்நாடக இசையையும், பரதக் கலையையும் மையமாக வைத்து 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தெலுங்கு திரைப்படம். வெளிவந்த வருடத்தில் 4 தேசிய விருதுகளையும், 4 நந்தி விருதுகளையும், 1 ஃபிலிம் ஃபேர் விருதையும் பெற்ற திரைப்படம். எஸ்.வி. சோமையாஜூலூவுக்கு சிறந்த நடிகர் விருதையும் பெற்றுத்தந்தது. அதன் இயக்குனர் கே.விஸ்வநாத்துக்கு இந்த ஆண்டு ‘தாதா சாகேப் பால்கே’ விருது அளித்து கெளரவித்தது மத்திய அரசு. 

இசை கே.வி. மகாதேவன், ஒளிப்பதிவு பாலுமகேந்திரா, என ஜாம்பவான்கள் பங்கு பெற்ற இந்த திரைப்படத்தின் பெருமைக்குரிய நினைவைக் கொண்டாடும் வகையில் நடிகை துளசி ‘சங்கராபரணம் விருதுகள்’ என்ற பெயரில் இந்திய சினிமாவில் புது விருது ஒன்றை உருவாக்கி இந்தியாவின் பிரதான ஐந்து மொழிகளைச் சார்ந்த திரைப்படக் கலைஞர்களை கெளரவிக்கும் வகையில் சிறந்த நடிகர், நடிகை, இயக்குனர் உள்ளிட்ட பிரிவுகளில் விருதுகளை அறிவித்துள்ளார்.

இந்த துளசி வேறு யாருமல்ல? சங்கராபரணம் திரைப்படத்தில் மஞ்சு பார்கவியின் மகனாக வந்த குழந்தை நட்சத்திரம் தான் துளசி. தனது குருவும், தெலுங்கு சினிமாவில் தன்னை அறிமுகப் படுத்தி வழிநடத்தியவருமான இயக்குனர் கே. விஸ்வநாத்தின் திரைப்பயணத்தின் நினைவாக அவரது மாபெரும் வெற்றி பெற்ற திரைக்காவியமான சங்கராபரணத்தின் பெயரிலேயே தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றூம் இந்தி உள்ளிட்ட ஐந்து மொழிக் கலைஞர்களுக்கு விருதளிப்பதே சாலச் சிறந்ததென முடிவெடுத்ததாக துளசி தெரிவித்த்துள்ளார். ஏன் ஐந்து மொழிக் கலைஞர்களுக்கு விருதளிக்க வேண்டும்? என்ற கேள்விக்கு... கே.விஸ்வநாத் மதம், இனம், மாநிலம், மொழி எனும் எல்லைகளைக் கடந்து மேற்கண்ட ஐந்து மொழிப் படங்களிலும் தனது கலைச் சேவையை திறம்பட ஆற்றியவர். அவரது திரைப்பங்களிப்பை போற்றும் வகையில் அவரது திரைப்படத்தின் பெயரால் விருதளிக்கும் போது 5 மொழி கலைஞர்களுக்கும் விருதளிப்பதே பொருத்தமாக இருக்கும் எனக் குறிப்பிட்டார். 

‘சங்கராபரணம்’ விருதுகளைப் பொறுத்தவரை, இது அறிமுக வருடம் என்பதால் குறிப்பிட்ட சில பிரிவுகளில் மட்டுமே விருதுகளை அளிக்க முடிந்தது. அடுத்த ஆண்டு நன்றாகத் திட்டமிட்டு மேலும் பல பிரிவுகளில் திரைக்கலைஞர்களுக்கு விருதளிக்க முடிவெடுத்திருப்பதாகவும் துளசி தெரிவித்தார். இன்று நடைபெற இருக்கும் இந்த விருது விழாவில் டங்கல் திரைப்படத்துக்காக நடிகர் அமீர்கான், ஜனதா கரேஜ் திரைப்படத்துக்காக ஜூனியர் என்.டி.ஆர், இருவரும் சிறந்த நடிகர் விருது பெறுகிறார்கள். நடிகர் தனுஷ் சிறந்த புதுமுக இயக்குனராக விருது பெற உள்ளார். நடிகை அலியா பட்டுக்கு ‘உத்தா பஞ்சாப்’ திரைப்படத்தில் சிறந்த நடிப்பை வழங்கியமைக்காக சிறந்த நடிகை விருது வழங்கப் பட உள்ளது என துளசி அறிவித்துள்ளார்.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com