செல்வராகவன் படத்தின் புதிய டிரெய்லர்!

நெஞ்சம் மறப்பதில்லை படம் ஜூன் 30 அன்று வெளியாகிறது. இந்நிலையில் படத்தின் புதிய டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள படம் - நெஞ்சம் மறப்பதில்லை. நந்திதா, ரெஜினா ஆகியோர் நடிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்துக்குத் தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. முதலில் ஏ சான்றிதழ் தான் கிடைத்தது. ஆனால் இதை எதிர்த்து மறு தணிக்கைக்கு அனுப்பினார்கள். அதில் யு/ஏ கிடைத்தது.

நெஞ்சம் மறப்பதில்லை படம் ஜூன் 30 அன்று வெளியாகிறது. இந்நிலையில் படத்தின் புதிய டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

அடுத்தப் படமாக சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் மன்னவன் வந்தானடி படத்தை இயக்கி வருகிறார் செல்வராகவன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com