நாடாளுமன்றத்தில் வெளியிடப்படும் ஹிந்திப் பட டிரெய்லர்!

சுதந்தரப் போராட்ட வீரர்களுக்கு மரியாதை தருவதற்காக நாடாளுமன்றத்தில்...
நாடாளுமன்றத்தில் வெளியிடப்படும் ஹிந்திப் பட டிரெய்லர்!

ராக்தேஷ் என்கிற சுதந்தரப் போராட்டம் குறித்த ஹிந்திப் படத்தின் டிரெய்லர் நாடாளுமன்றத்தில் விரைவில் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுபற்றி படத்தின் இயக்குநர் திக்மன்சு துலியா கூறியதாவது: சுதந்தரப் போராட்ட வீரர்களுக்கு மரியாதை தருவதற்காக நாடாளுமன்றத்தில் ராக்தேஷ் படத்தின் டிரெய்லர் வெளியிடப்படவுள்ளது. இதுவரை நாடாளுமன்றத்தில் எந்தவொரு படத்தின் டிரெய்லரும் வெளியிடப்பட்டதில்லை. இதுவே எங்கள் படத்துக்குக் கிடைத்த கெளரவமாகும் என்று கூறியுள்ளார். 

சுபாஷ் சந்திர போஸ் ஆரம்பித்த இந்திய தேசிய ராணுவத்தை மையமாகக் கொண்டுள்ள படம் - ராக்தேஷ். குனால் கபூர், அமித் சத், மோஹித் மர்வா, மிருதுளா முரளி போன்றோர் நடித்துள்ளார்கள். ஜூலை 28 அன்று வெளிவரவுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com