விஜய் நடிக்கும் ‘மெர்சல்’ ட்விட்டரில் புதிய சாதனை!

விஜய் பிறந்தநாள் சமயத்தில் வெளியான மெர்சல் தலைப்பும் அப்படத்தின் முதல் பார்வை போஸ்டர்களும் ட்விட்டரில் சாதனை படைத்துள்ளன...
விஜய் நடிக்கும் ‘மெர்சல்’ ட்விட்டரில் புதிய சாதனை!

விஜய் பிறந்தநாள் சமயத்தில் வெளியான மெர்சல் தலைப்பும் அப்படத்தின் முதல் பார்வை போஸ்டர்களும் ட்விட்டரில் சாதனை படைத்துள்ளன.

தெறி படத்துக்குப் பிறகு விஜய் - அட்லி கூட்டணி மீண்டும் இணைந்து உருவாகிவரும் படத்தின் தலைப்பும் முதல் பார்வை போஸ்டர்களும் சமீபத்தில் வெளியிடப்பட்டன.  

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் என மூன்று கதாநாயகிகள் நடிக்கிறார்கள். மேலும் சத்யராஜ், எஸ்.ஜே. சூர்யா, வடிவேலு, கோவை சரளா, சத்யன், யோகி பாபு எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் பங்கேற்கிறது. ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் 100-வது படம் இது. ஜி.கே. விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உருவாகிவரும் மெர்சல் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளது. தீபாவளியன்று படம் வெளிவருகிறது.

விஜய் 61 என்று இதுவரை அழைக்கப்பட்டு வந்த இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர்களும் படத்தின் தலைப்பும் விஜயின் பிறந்தநாளையொட்டி (ஜூன் 22) வெளியிடப்பட்டன. உடனே, விஜய் ரசிகர்கள் இப்படம் பற்றிய புதிய தகவல்களைச் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்தார்கள்.  

இந்நிலையில் தலைப்பு அறிவிக்கப்பட்ட நொடி முதல் ட்விட்டர் சமூகவலைத்தளத்தில் மெர்சல் குறித்த விவாதங்கள் அதிகமாக இருந்தன. விஜய்க்கும் அட்லிக்கும் ஏராளமான வாழ்த்துகள் குவிந்தன. கடைசியில் மெர்சல் படம் குறித்த ட்வீட்கள் ஒரு சாதனை படைத்துள்ளன.

மெர்சல் படத்தின் முதல் பார்வை போஸ்டர் குறித்த 10 லட்சம் ட்வீட்கள் வெளியாகியுள்ளதாக ட்விட்டர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. விவேகம் படத்தில் இடம்பெற்றுள்ள சர்வைவா பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. உடனே ரசிகர்கள் இந்தப் பாடலை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்ததால் இப்பாடல் யூடிபில் ஒரு சாதனை செய்தது. இந்தப் பாடலுக்கு யூடியூபில் 10 லட்சம் பார்வைகள் கிடைத்ததில், தமிழ்ப் பாடல்களில் மிக குறுகிய காலத்தில் இந்த எண்ணிக்கையைத் தொட்ட பாடல் என்கிற பெருமையை அடைந்துள்ளது. இதையடுத்து விஜய் நடித்துவரும் மெர்சல் படம் 10 லட்சம் ட்வீட்கள் என்கிற சாதனையைச் செய்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com