எனக்குப் பிடித்த உடைகளைத் தான் நான் அணிவேன்! ஸ்ருதி ஹாசன் நெத்தியடி!

ஸ்ருதி ஹாசன் ட்ரெண்டியாக உடை அணிவதில் விருப்பம் உள்ளவர். மெல்லிடை அழகி
எனக்குப் பிடித்த உடைகளைத் தான் நான் அணிவேன்! ஸ்ருதி ஹாசன் நெத்தியடி!

ஸ்ருதி ஹாசன் ட்ரெண்டியாக உடை அணிவதில் விருப்பம் உள்ளவர். மெல்லிடை அழகியான ஸ்ருதி ஃபேஷன் டிவாவாக மாறியிருக்கிறார். சமீபத்தில் நடந்த 2017-வருட கான்ஸ் திரைப்பட விழாவில் அவருடைய உடைகளே இதற்கு சாட்சி. ஸ்ருதியின் உடை அலங்காரத்துக்கு நிறைய ரசிகர்கள் உள்ளார்கள், அதே சமயத்தில் விமரிப்பவர்களும் உள்ளார்கள். 

ஆடை அலங்கார விஷயங்களில் மற்றவர்களுடைய கருத்தைப் பற்றி ஸ்ருதி ஹாசன் என்ன நினைக்கிறார்? இதனை வெளிப்படையாகவே சொல்லிவிட்டார் ஸ்ருதி. மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்பதைப் பற்றி எனக்குத் துளியும் கவலை இல்லை. என்னுடைய ஆசைக்கும் விருப்பத்துக்கும் ஏற்றபடி நான் ட்ரெஸ் செய்து கொள்கிறேன். எனக்குப் பிடித்த ஆடைகளை தானே நான் அணிய முடியும் என மனம் விரும்புவதை அணிந்து மகிழ்வதாகச் சொன்னார். 

ஃபார் எவர் 21, ஜாரா (Forever 21, Zara) போன்ற கடைகளில் பெரும்பாலும் ஷாப்பிங் செய்வதை விரும்புவார் ஸ்ருதி. இதற்காக அதிக பணம் செலவழிக்க வேண்டியதில்லை. ரசனை தான் முக்கியம் என்கிறார். தவிர மெகா டிஸ்கவுண்ட் கிடைக்கும் சமயங்களில் அதைப் பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம் என்றும் டிப்ஸ் அளித்தார். இந்த டிரெஸ் உங்களுக்கு நல்லாயிருக்கும் என்று யாரேனும் ஸ்ருதிக்கு பரிந்துரை செய்தாலும் அது தனக்குப் பொருத்தமாக இருந்தால் மட்டுமே கவனத்தில் கொள்வார் ஸ்ருதி. வெளியிடங்களுக்கும், நிகழ்ச்சிகளுக்குப் போகும் போதும் சரி எப்போதுமே தனக்காக மட்டுமே ட்ரெஸ் செய்வதாக ஸ்ருதி கூறுகிறார். ஃபேஷன் பற்றிய ஸ்ருதி ஹாசனின் வெளிப்படையான பேச்சுக்கு ரசிகர்கள் அதிகரித்துவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com