பாகுபலி 2 தொலைக்காட்சி உரிமையை வாங்கியது விஜய் டிவி?

பாகுபலி 2 படத்தின் தொலைக்காட்சி உரிமையை விஜய் டிவி வாங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகுபலி 2 தொலைக்காட்சி உரிமையை வாங்கியது விஜய் டிவி?

பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவான படம் - பாகுபலி. இதனை இயக்கியவர், ராஜமெளலி.

ரூ. 600 கோடி வரை வசூலித்து பல சாதனைகளைச் செய்த பாகுபலியின் 2-ம் பாகமான, 'பாகுபலி தி கன்க்ளூஷன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏப்ரல் 28 அன்று பாகுபலி 2 வெளிவருகிறது.

இந்நிலையில் பாகுபலி 2 (தமிழ்) படத்தின் தொலைக்காட்சி உரிமையை விஜய் டிவி வாங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இனிமேல் கும்கி போல அடிக்கடி பாகுபலி 2-யும் விஜய் டிவியில் பார்க்க நேருமோ?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com