'காற்று வெளியிடை' - இசை வெளியீட்டு விழா

கார்த்தி - அதிதி ராவ் ஹிதாரி நடிப்பில் மணிரத்னம் இயக்கி ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள
'காற்று வெளியிடை' - இசை வெளியீட்டு விழா

கார்த்தி - அதிதி ராவ் ஹிதாரி நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள திரைப்படம் 'காற்று வெளியிடை' திரைப்படத்தின் இசை வெளியீடு நிகழ்ச்சி இன்று (மார்ச் 20, 2017) காலை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. ஏப்ரல் 7-ம் தேதி படம் வெளிவருகிறது,  இன்றைய  இசை வெளியீட்டு நிகழ்ச்சியுடன் போனஸாக இப்படத்தில் ட்ரையிலரும் வெளியிடப்பட்டது பார்வையாளர்களை மகிழ்ச்சியடையச் செய்தது.

காற்று வெளியிடை படக்குழுவினர் அனைவரும் பங்கேற்ற இந்த விழாவில் பேசிய இயக்குனர் மணிரத்னம், தன்னுடைய சக கலைஞர்களான ரஹ்மானுக்கும் வைரமுத்துவுக்கும் நன்றி தெரிவித்தார். ரஹ்மானை நேற்று தான் சந்தித்தது போலிருக்கிறது அதற்குள் 25 வருட காலம் ஓடிவிட்டது. ரஹ்மான் எந்தவித மாற்றமும் இன்றி இதே புன்னகையுடன் அப்படியே தான் இருக்கிறார், இத்தனை உயரத்தை அடைந்தும் எப்போதும் முதல் படத்தில் வேலை செய்வதைப் போலவே சிரத்தையுடன் இருக்கிறார்.  25 வருட காலமாக இந்த மூவர் கூட்டணி வெற்றிகரமாக தொடர்வதில் மகிழ்ச்சியென்றும் தன்னை இதுவரை பொருத்து வந்த அக்கலைஞர்கள் மேலும் சில வருடங்கள் பொருத்துக் கொள்ள வேண்டும் என்று நெகிழ்ச்சியாகப் பேசினார்.  

ஏ.ஆர்.ரஹ்மான் பேசுகையில் தன்னுடைய முதல் பயணத்தில் ஆரம்பித்த இடம் இதுவென்றும் காற்று வெளியிடை வரை தொடர்ந்துள்ளது உலகம் முழுவதும் பயணப்பட முடிந்த காரணம். தமிழ் மக்கள் தந்த அன்பு தான். அதற்கு மணி சாருக்கு நன்றி. எல்லா புகழும் இறைவனுக்கே என்று கூறினார்.

நிகழ்ச்சியின் எதிர்பாராத சிறப்பு விருந்தினராக வந்த சூர்யா, கார்த்தி இயக்குநர் மணிரத்னத்தின் உதவி இயக்குனராக பணியில் சேர்ந்து இன்று அவர் அவருடைய படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். மணி சாரின் இயக்கத்தில் கார்த்தியின் அவர் நடிப்பு காலத்தில் கிடைத்த வரம். மணிரத்னம் ஏ.ஆர்.ரஹ்மான் இருவரும் எவ்வித கருத்து வேறுபாடும் இல்லாமல், ஒரே சீராக 25 வருட காலம் இணைந்து பணியாற்றுவது உண்மையில் பெரிய விஷயம், அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம் இது’ என்றார். 

ஏற்கனவே படத்தின் மூன்று பாடல்கள் இணையத்தில் வெளியானதும் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது. அதிலும் அழகியே மற்றும் வான் வருவான் பாடல்கள் அனைவராலும் பெரிதும் விரும்பப்பட்டுள்ளது. இன்று சத்யம் திரையரங்கில் படத்தில் ட்ரைலரை வெளியிட்டார்கள். சென்ஸாரில் யூ சான்றிதழ் பெற்றுவிட்ட காற்று வெளியிடை ஏப்ரல் 7 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும். ரசிகர்களுக்கு கோடை விருந்தாக இத்திரைப்படம் விளங்கும் என்பதில் சந்தேகமில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com