தந்தையை இழந்து தவிக்கும் கே.வி. ஆனந்த், சூரி!

நகைச்சுவை நடிகர் சூரியின் தந்தை ஆர். முத்துசாமியும் (75) மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகில்...
தந்தையை இழந்து தவிக்கும் கே.வி. ஆனந்த், சூரி!

நேற்றிரவு, இரு திரையுலகப் பிரபலங்கள் தங்களுடைய தந்தையை இழந்துள்ளார்கள். 

இயக்குநர் கே.வி. ஆனந்தின் தந்தை வெங்கடேசன் (74) சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். வெங்கடேசனுக்கு கேவி ஆனந்த், கமல், ஸ்ரீதர் என மூன்று மகன்கள். 

தான் இயக்கிய கவண், வருகிற 31-ம் தேதி வெளியாகிற சமயத்தில் தன்னுடைய தந்தையை இழந்துள்ளார் கே.வி. ஆனந்த்.

நகைச்சுவை நடிகர் சூரியின் தந்தை ஆர். முத்துசாமியும் (75) மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகில் உள்ள ராஜாகூரில் உடல்நலக்குறைவால் நேற்றிரவு காலமானார். 

இருவருக்கும் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com