சீனாவில் நெ.1 படம்: ரூ. 200 கோடி அள்ளியது டங்கல்!

சீனாவில் நெ.1 படம்: ரூ. 200 கோடி அள்ளியது டங்கல்!

சமீபத்தில் வெளியான ஹாலிவுட் படங்களையெல்லாம் பின்னுக்குத்தள்ளி முதல் இடத்தையும் பிடித்துள்ளது... 

பாகுபலி 2 படம் உலகெங்கும் வசூல் சாதனைகளைச் செய்துகொண்டிருக்கும்போது, அமீர் கானின் டங்கல் படம் சீனாவில் மகத்தான சாதனைகளை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது.

சீனாவில் முதல் வாரம் ரூ. 187 கோடியை வசூலித்த டங்கல், நேற்றுடன் மொத்தமாக ரூ. 213 கோடி வசூலித்து சாதனை செய்துள்ளது. சீனாவில் ஓர் இந்தியப் படம் இத்தகைய வசூலை பெற்றிருப்பது இதுவரை கண்டிராத ஒன்று.

அமீர் கான், சாக்‌ஷி தன்வார் நடிப்பில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - டங்கல். இந்தியாவில் 4300 திரையரங்குகளில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளியான டங்கல், வெளிநாடுகளில் 1000 திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. 

டங்கல் படம் கடந்த வாரம் வெள்ளியன்று சீனாவில் வெளியானது. அங்கு மட்டும் 7000 திரையரங்குகளில் வெளியானது. இதற்கு முன்பு வேறெந்த இந்தியப் படமும் சீனாவில் இவ்வளவு திரையரங்குகளில் வெளியானதில்லை. சீனாவில் மொத்தம் 40,000 திரையரங்குகள் உள்ளன (இந்தியாவில் 8500). அங்கு டங்கல் படம், Shuai Jiao Baba என்கிற பெயரில் வெளியானது. 

இதற்கு முன்பு அமீர் கானின் பிகே படம், 2015ல் சீனாவில் 4000 திரையரங்குகளில் வெளியானது. 16 நாள்களில் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. எனவே, அதைவிடவும் டங்கல் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் முதல் நான்கு நாள்களிலேயே ரூ. 100 கோடி வசூலை எட்டிய டங்கல், நேற்றுடன் ரூ. 200 கோடியை அடைந்துள்ளது. சீனாவில் இந்த உயரத்தை எட்டிய முதல் இந்தியப் படம் என்கிற பெருமையைத் தற்போது பெற்றுள்ளது. 

இதுமட்டுமல்லாமல், சீனாவில் சமீபத்தில் வெளியான ஹாலிவுட் படங்களையெல்லாம் பின்னுக்குத்தள்ளி முதல் இடத்தையும் பிடித்துள்ளது டங்கல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com