ஜிஎஸ்டி வரி விதிப்பு: மத்திய அரசுக்கு ஃபெப்ஸி கோரிக்கை

திரைத் துறை மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பை ரத்து செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று ஃபெப்ஸி அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
ஜிஎஸ்டி வரி விதிப்பு: மத்திய அரசுக்கு ஃபெப்ஸி கோரிக்கை

திரைத் துறை மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பை ரத்து செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று ஃபெப்ஸி அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு சனிக்கிழமை விடுத்துள்ள செய்தி: திருட்டு வி.சி.டி., இணையதள பதிவிறக்கம், குறைந்து வரும் திரையரங்குகள் எனப் பல்வேறு பிரச்னைகளால் தமிழ் திரையுலகம் திணறி வருகிறது.

இந்த வேளையில், திரைத் துறை மீது மத்திய அரசு விதித்துள்ள ஜி.எஸ்.டி. வரி விதிப்பு சினிமா தொழிலாளர்களுக்கு கடும் சுமையாக மாறியுள்ளது. திருட்டு வி.சி.டி., பிரச்னைகளுக்கு தண்டனைச் சட்டம் இயற்றாத மத்திய அரசு, 28 சதவீத கூடுதல் வரி விதிப்பை அறிவித்துள்ளது. சினிமாவில் பணம், புகழ், மீடியா வெளிச்சம் என மிளிரும் நட்சத்திரங்களுக்கு மத்தியில் தினக்கூலிகளாக பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் இந்த வரி விதிப்பு அமையும். எனவே, மத்திய அரசு பரிவு காட்ட வேண்டும் என்று அதில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com