பி.டி. உஷாவின் வாழ்க்கை சித்திரத்தில் நடிக்க ஆசை: நடிகை பூஜா பத்ரா!

பி.டி. உஷாவின் வாழ்க்கை சித்திரத்தில் நடிக்க ஆசை: நடிகை பூஜா பத்ரா!

சரத்குமாருடன் ‘ஒருவன்’ திரைப்படத்தில் நடித்த நடிகை பூஜா பத்ராவை நினைவிருக்கிறதா?

சரத்குமாருடன் ‘ஒருவன்’ திரைப்படத்தில் நடித்த நடிகை பூஜா பத்ராவை நினைவிருக்கிறதா? அவர் அந்தப் படத்திற்குப் பிறகு அதிகமாகத் தமிழ்ப் படங்களில் முகம் காட்டவில்லை எனினும் பாலிவுட்டில் நடித்துக்கொண்டு தான் இருக்கிறார். பாலிவுட்டின் வெற்றிப் பட வரிசைகளில் ஒன்றான ‘விராசத்’ ல் பூஜாவுக்கு தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு அமைந்தது. அதைத் தொடர்ந்து விரைவில் வெளிவரவிருக்கும் தனது புதிய திரைப்படங்களான ‘மிரர் கேம்’ மற்றும் ‘ஆப் கேள் ஷுரு’ திரைப்படங்களை புரமோட் செய்வதற்கான செய்தியாளர் சந்திப்பில் சமீபத்தில் பூஜா கலந்து கொண்டார். அந்த சந்திப்பில் பூஜா தெரிவித்ததாவது;

தற்போது இந்தியாவில் பயோபிக் திரைப்படங்கள் வெளிவந்து வெற்றிகளையும் பெற்றுக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் தனக்கு பிரபல ஓட்டப் பந்தய வீரங்கனையான பி.டி.உஷாவின் பயோ பிக்கில் நடிக்க ஆசை என்றும், பள்ளியில் படிக்கும் போது தான் தனது பள்ளியின் சார்பாக 100 மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஓட்டப் பந்தயங்களில் கலந்து கொண்டு பல வெற்றிகளையும், பரிசுக் கோப்பைகளையும் பெற்றிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். தானே அடிப்படையில் ஒரு தடகள வீரங்கனையாக இருந்ததால் தனக்கு பி.டி.உஷாவின் கதாபாத்திரத்தில் நடிக்க மிகுந்த ஆர்வம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். முன்னதாக தான் நடித்த ஹாலிவுட் திரைப்படங்களில் ஒன்றான ‘ஒன் அண்டர் தி சன்’ எனும் படத்தில் மறைந்த விண்வெளி வீரங்கனையான கல்பனா சாவ்லா வேடத்தை தான் ஏற்று நடித்திருப்பதால் பயோபிக்கில் நடிப்பது தனக்கு கடினமான விசயமில்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

மேலும் அந்த செய்தியாளர் சந்திப்பில், இந்தியத் திரையுலகில் பெண் தடகள வீரங்கனைகளின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் பயோபிக்குகள் இன்னும் அதிகம் வர வேண்டும் என்றும் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் அம்மாதிரியான கதைகளை ஊக்குவிக்க வேண்டும் என்றும் பூஜா கேட்டுக் கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com