பிராந்திய இயக்குனர்களுக்கு நம்பிக்கையளிக்கும் படமாக அமைந்து விட்டது பாகுபலி: பிரபாஸ்!

பிராந்திய இயக்குனர்களுக்கு நம்பிக்கையளிக்கும் படமாக அமைந்து விட்டது பாகுபலி: பிரபாஸ்!

இனி பிரமாண்ட படங்களை இயக்குவதில் பிராந்திய இயக்குனர்களுக்கு இருந்த மனத்தடை நிச்சயம் தகர்ந்து போகும். புதுப் புது ஐடியாக்களுடன் சிறந்த திரைப்படத் தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்திக் கொண்டு பிரமாண்டமான

ஒரே ஒரு திரைப்படத்தின் இரண்டு பாகங்கள். அதில் அமரேந்திர பாகுபலி, மகேந்திர பாகுபலி என இரட்டைக் குதிரை சவாரி செய்து இன்று மொத்த இந்தியக் குடும்பங்களுக்குள்ளும் ஒரு நபராக மாறிப் போனவராகக் கருதப் படும் பிரபாஸ் சொன்னது தான் மேற்படி கூற்று! ஆம் அவர் சொன்னதில் நிஜம் இருக்கத்தான் செய்கிறது. ராஜமெளலியின் கனவான பாகுபலி சினிமா இன்று கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இப்படிப் பட்ட பிரமாண்ட திரைப்படங்களை எடுப்பதிலிருக்கும் சாமர்த்திய வெற்றிகளை உலகுணரச் செய்திருக்கிறது என்பது நிஜம் தான்.

இனி பிரமாண்ட படங்களை இயக்குவதில் பிராந்திய இயக்குனர்களுக்கு இருந்த மனத்தடை நிச்சயம் தகர்ந்து போகும். புதுப் புது ஐடியாக்களுடன் சிறந்த திரைப்படத் தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்திக் கொண்டு பிரமாண்டமான திரைப்படங்களை உருவாக்க இனி நிறைய இளம் இயக்குனர்கள் முன் வருவார்கள் என நம்பலாம். ஏனெனில் ஒரே ஒரு பாகுபலியால் எல்லைகள் தாண்டி வெவ்வேறு மொழி பேசும் அனைத்து மாநில மக்களையும் ஈர்க்க முடிந்திருக்கிறதே! மாநில எல்லைகள் மட்டுமல்ல பாகுபலி இந்தியா தாண்டி சீனா, பாகிஸ்தான், அமெரிக்கா, கனடா, ஃபிரான்ஸ் என தேச எல்லைகளைக் கடந்தும் பல இடங்களில் திரையிடப்பட்டு பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்‌ஷனில் தனது தடங்களைப் பதித்திருக்கிறது. எனவே பாகுபலி படம் கண்டம் விட்டு கண்டம் தாவி உலகையே அசைத்திருக்கிறது எனில் இனி நமது பிராந்திய மொழி இயக்குனர்களில் பலரிடமிருந்து இது போன்ற வெற்றிப் படங்களை நாம் தொடர்ந்து எதிர்பார்க்கலாம். அதற்கான நம்பிக்கையை பாகுபலி உருவாக்கி விட்டது என பிரபாஸ் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com