சிவகார்த்திகேயனின் வேலைக்காரனுடன் மோதும் ஏ.ஆர். முருகதாஸ் படம்!

மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் வேலைக்காரன் படம் வெளிவருகிற அதே தினத்தில்...
சிவகார்த்திகேயனின் வேலைக்காரனுடன் மோதும் ஏ.ஆர். முருகதாஸ் படம்!

மகேஷ் பாபு நடிக்கும் ஸ்பைடர் படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர். முருகதாஸ். இதில் ராகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகிவருகிறது. இசை, ஹாரிஸ் ஜெயராஜ்; ஒளிப்பதிவு, சந்தோஷ் சிவன்.

இப்படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்து மகேஷ் பாபு ட்விட்டரில் கூறியதாவது: ஸ்பைடர் படம் தசரா வெளியீடாக இருக்கும். டீசர் மே 31-ம் தேதி 5 மணிக்கு வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் மோகன் ராஜா இயக்கி வரும் படம் - வேலைக்காரன். 24ஏம் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

ஆகஸ்ட் 25 அன்று வேலைக்காரன் வெளிவரும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் 29 அதாவது ஆயுத பூஜை அன்று படம் வெளிவரும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. முதல் பார்வை ஜூன் 5-ம் தேதி வெளியிடப்படும். 

செப்டம்பர் 29 - ஆயுத பூஜை. அடுத்ததாக செப். 30, அக்டோபர் 1, 2 ஆகிய அனைத்தும் அரசு விடுமுறை தினங்கள். இதனால் தொடர்ந்து 4 தினங்கள் விடுமுறையாக உள்ளதால் இது வசூலுக்கு மிகவும் உதவும் என்று அச்சமயத்தில் வேலைக்காரன் படம் வெளிவருகிறது. 

சிவகார்த்திகேயனின் முந்தைய படமான ரெமோவும் ஆயுத பூஜை சமயத்தில் வெளியாகி வசூலை அள்ளியது. அக்டோபர் 7-ம் தேதி வெளியான அந்தப் படம் தொடர்ந்து 6 நாள்கள் சீரான வசூலை அள்ளி மகத்தான சாதனை படைத்தது. முதல் நாளிலேயே ரூ. 8 கோடி வரை வசூல் செய்தது. முதல்வார விடுமுறை தினங்களின் வசூலாக ரூ. 50 கோடியை அள்ளியது. இந்தப் படத்துக்குத் தமிழ்நாட்டில் ரூ. 37 கோடியும் வெளிநாட்டில் ரூ. 13 கோடியும் முதல் வாரத்தில் கிடைத்தது. இப்படி, சிவகார்த்திகேயனின் படங்களில் அதிக வசூல் கண்ட படம் ரெமோதான். அதேபோன்றதொரு வசூலை அடைய வேலைக்காரன் படமும் அதே பாணியில் வெளிவரவுள்ளது.

தற்போது வேலைக்காரன் படம் வெளியாகும் அதே தினத்தில் ஸ்பைடரும் வெளிவருவதால் இரு படங்கள் இடையேயும் கடும்போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com