தாதா சாகேப் பால்கே விருது பெறவிருக்கும் நடிகை பிரியங்கா சோப்ரா!

தாதா சாகேப் பால்கே விருது பெறவிருக்கும் நடிகை பிரியங்கா சோப்ரா!

இந்தியத் திரை உலகினருக்குக் கிடைக்கும் கெளரவச் சின்னமாகவும், வாழ்நாள் அங்கீகாரமாகவும் இவ்விருது கருதப்படுகிறது.

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

திரைத் துறையில் தன்னிகரற்ற சேவையாற்றி வரும் கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்தியத் திரை உலகினருக்குக் கிடைக்கும் கெளரவச் சின்னமாகவும், வாழ்நாள் அங்கீகாரமாகவும் இவ்விருது கருதப்படுகிறது.

சத்யஜித் ரே, பிருத்விராஜ் கபூர், நாகிரெட்டி, எல்.வி.பிரசாத், ராஜ்கபூர், லதா மங்கேஷ்கர், சிவாஜி கணேசன், கே.பாலசந்தர் உள்ளிட்ட திரையுலக ஜாம்பவான்கள் பலரின் புகழுக்கு தாதா சாகேப் விருது அணி சேர்த்துள்ளது. 2016-ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது சர்வதேச அளவில் புகழ்பெற்ற பல திரைப்படங்களை இயக்கிய கே.விஸ்வநாத்துக்கு அவ்விருது கிடைத்தது. தங்கத் தாமரை பதக்கம் மற்றும் ரூ.10 லட்சம் பரிசுத் தொகை அவருக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வருடம் முதல், சர்வதேச அளவில் புகழ்பெற்ற நடிகை என்கிற புதிய பிரிவு இதில் சேர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தாதா சாகேப் பால்கே அகாடமி விருதுக் குழுவின் தலைவர் கணேஷ் ஜெயின் கூறியதாவது: பிரியங்கா சோப்ரா, தனது கடின உழைப்பால் சர்வதேசத் தளத்தில் அறியப்பட்டுள்ளார். இந்தியா சார்பாக உலக அளவில் அவர் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி வருகிறார். அவர் பணிகளால் ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படுகிறான். இது பால்கே அகாடமி விருதில் புதிய பிரிவைச் சேர்க்கக் காரணமாக அமைந்துள்ளது என்று கூறியுள்ளார். இதையடுத்து மும்பையில் ஜூன் 1 அன்று நடைபெறுகிற விழாவில் இவ்விருதை பிரியங்கா சோப்ரா பெறவுள்ளார்.  

பிரியங்கா சோப்ரா நடித்த ஹாலிவுட் படமான பே வாட்ச் மே 26 அன்று வெளியானது. இந்தியாவில் இப்படம் ஜூன் 2-ம் தேதி வெளிவரவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com