சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவேற்றும் பிரபல பாலிவுட் பாடகருக்கு ட்விட்டரில் என்ன ஆச்சு?

குறிப்பாக JNU வின் சமூகப் போராளி மாணவியான ஷீலா ரஷீதை கடுமையாக விமர்சித்து அபிஜித்தின் ட்விட்டரில் கருத்துக்கள் நிறைந்திருந்ததால் அவரது கணக்கு முடக்கப் பட்டதாகக் கூறப்படுகிறது.
சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவேற்றும் பிரபல பாலிவுட் பாடகருக்கு ட்விட்டரில் என்ன ஆச்சு?

சல்மான் கான் சாலையில் தூங்கி கொண்டிருந்தவரின் மீது கார் ஏற்றி கொன்ற வழக்கில் சல்மானுக்கு ஆதரவாக ‘சாலைகள் என்பவை கார்களுக்காகவும், நாய்களுக்காகவும் மட்டுமே தவிர மனிதர்கள் தூங்குவதற்காக அல்ல” என்று சிக்கலான கருத்துக் கூறி பலத்த கண்டனத்துக்கு உள்ளான பாலிவுட் பாடகர் அபிஜித் பட்டாச்சார்யாவின் ட்விட்டர் கணக்கு மீண்டும் முடக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெண்களுக்கு எதிராகவும், ஆபாசமாகவும் இவரது ட்விட்டர் கணக்கில் எழுதப் பட்டு வந்ததால் அபிஜித்தின் கணக்கு முடக்கியுள்ளதாக ட்விட்டர் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. அபிஜித்தின் ட்விட்டர் கணக்கு இதோடு இரண்டு முறை முடக்கப் பட்டு விட்டது. முதல்முறை முடக்கப் பட்டதும் வேறொரு புதுக் கணக்கு தொடங்கி ட்விட்டரில் இயங்கத் தொடங்கிய அபிஜித்; அதில் ஒரு வீடியோவை போஸ்ட் செய்து ‘இனிமேல் இது தான் தனது அதிகார பூர்வ ட்விட்டர் கணக்கு, இனிமேல் இதில் இயங்குவேன். நமது தேசத்துக்கும் இந்திய ராணுவத்துக்கும் எதிராகப் பேசுபவர்களை நான் எதிர்க்கிறேன். நான் தொடர்ந்து இப்படிக் கூறி வருவதால் சிலர் எனது குரலை மேலெழும்ப விடாமல் அமுக்கப் பார்க்கிறாரகள். ஆனால் அதற்காக நான் ஓய்ந்து விட மாட்டேன் @singerabhijeet எனும் புது ட்விட்டர் முகவரியில் இனிமேல் இயங்குவேன் எனத் தெரிவித்துள்ளார்.

திங்களன்று இவரது சோதிக்கப் பட்ட ட்விட்டர் கணக்கு முடக்கப் பட்ட பின்னர் புதிதாகத் தொடங்கியுள்ள இந்த முகவரியில் ‘I am the best... I am the best'  எனும் பாடல் வரிகள் டெஸ்க்ரிப்ஸனாகச் சேர்க்கப் பட்டுள்ளனவாம். இந்த பாடல் வரிகள் 2000 ஆம் ஆண்டில் ‘ஃபிர் பி தில் ஹாய் ஹிந்துஸ்தான்’ எனும் திரைப்படத்தில் அபிஜித் பாடிய ஹிட் பாடலின் முதல் வரிகள். எனவே அபிஜித்தின் ரசிகர்கள் அவரை ட்விட்டரில் தேடும் போது இவற்றை கவனத்தில் வைத்து அபிஜித்தின் உண்மையான ட்விட்டர் கணக்கை பின் தொடர வேண்டுமென அவர் கோரியுள்ளார். இது மட்டுமே அபிஜித்தின் அதிகார பூர்வ ட்விட்டர் கணக்கு. அவர் பெயரில் ட்விட்டரில் உலவும் மற்றவையெல்லாம் போலிகள் என அபிஜித் சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

முன்னதாக கடந்த 23 ஆம் தேதி ட்விட்டர் வலைதளம் அபிஜித்தின் ட்விட்டர் கணக்கில்  பெண்களுக்கு எதிரான ஆபாசமான கருத்துகளும், பெண்களைத் தாக்கும் வகையிலான வன்முறையான கருத்துகளும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன என்று கூறி அபிஜித்தின் பழைய ட்விட்டர் கணக்கை முடக்கியது. குறிப்பாக JNU வின் சமூகப் போராளி மாணவியான ஷீலா ரஷீதை கடுமையாக விமர்சித்து அபிஜித்தின் ட்விட்டரில் கருத்துக்கள் நிறைந்திருந்ததால் அவரது கணக்கு முடக்கப் பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் அபிஜித் இப்போது மறுபடியும் புதுக் கணக்கில் ட்விட்டரில் நுழைந்திருக்கிறார். சர்ச்சைக்குரிய விதத்தில் சமூக வலைதளங்களில் கருத்துக்களைப் பதியும் பிரபலங்களில் ஒருவராக அபிஜித்தின் மீதும் அழுத்தமான முத்திரை உண்டு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com