திரைப்படமாகிறது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வாழ்க்கை வரலாறு!

பிரபலங்களில் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்படுவது பாலிவுட்டில் புதிய விஷயமல்ல
திரைப்படமாகிறது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வாழ்க்கை வரலாறு!

பிரபலங்களில் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்படுவது பாலிவுட்டில் புதிய விஷயமல்ல. கிரிக்கெட் வீரர்கள் அசாருதீன், டோனி, சச்சின் டெண்டுல்கர், குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், டாக்டர் அம்பேத்கர், நடிகை சில்க் சுமிதா உள்ளிட்ட இந்தப் பட்டியல் நீளமானது. தற்போது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் வாழ்க்கை வரலாறும் பயோபிக் வகையில் படமாக்கம் செய்யப்படுகிறது.

டாக்டர் மன்மோகன் சிங் இந்தியாவின் 14-வது பிரதமராவார். 1991 முதல் 1996 வரை பி. வி. நரசிம்ம ராவ் அமைச்சரவையில் மன்மோகன் சிங் நிதி அமைச்சராக பணியாற்றினார். பொருளாதாரவியலில் வல்லுநரான மன்மோகன் சிங், இந்தியாவின் பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கையின் துவக்கத்தில் பெரும் பங்கு வகித்தார். மேலும் மத்திய ரிசர்வ் வங்கியின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். டாக்டர் மன்மோகன் சிங் நிதியமைச்சர் ஆவதற்கு முன்னால் இந்தியப் பொருளாதாரம் பின் தங்கியிருந்தது உண்மைதான். இவரது கொள்கைகளால் முன்னேறத் துவங்கியது எனக் கருதப்படுகிறது. 

கடந்த செப்டம்பர் மாதம் 26-ம் தேதி மன்மோகன் சிங்கின் 85-வது பிறந்த நாள். அதையொட்டி சமூக வலைத்தளங்களில் அவருக்கு பலவிதமான வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்தன.  மூன்றாண்டுகளுக்கு முன்பு வரை கடுமையாக விமரிசனம் செய்தவர்கள் எல்லாம் அவரை மகான் என்றும் மாமேதை என்றும் பலவிதமான வாழ்த்துக்களை பதிவிட்டது ஆச்சரியமான விஷயம். 

இந்நிலையில் மன்மோகன் சிங்கின் வாழ்க்கையில் நடந்த முக்கியமான அரசியல் மற்றும் சொந்த அனுபவங்களைத் தொகுத்து ஒரு படம் எடுக்க முடிவு செய்தது பாலிவுட் திரையுலகம். தற்போது அனுபம் கேர் நடிப்பில் திரைப்படம் The Accidental Prime Minister என்ற பெயரில் உருவாகி வருகிறது. 

சுனில் போஹ்ரா தயாரிக்கும் இத்திரைப்படத்தை இயக்குபவர் விஜய் ரத்னாகர் குட்டெ. The Accidental Prime Minister என்ற பெயரில் ஹன்சல் மேத்தா எழுதிய புத்தகத்தைத் தழுவி இத்திரைப்படம் எடுக்கப்படுக்கிறது. மன்மோகன் சிங் அதிகம் பேசும் இயல்புடையவர் அல்ல, என்பதால் இப்படத்துக்கு வசனம் எழுதுபவர்க்கு அதிக வேலை இருக்காது என்று சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் எழுதத் தொடங்கிவிட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com