தீரன் அதிகாரம் ஒன்று, பெண்கள் பார்க்க வேண்டிய படம்: கார்த்தி

நம்மைச் சுற்றியே இந்தக் கதை வந்துகொண்டு இருக்கிறதே என்று நான் யோசித்து இந்தக் கதையில்...
தீரன் அதிகாரம் ஒன்று, பெண்கள் பார்க்க வேண்டிய படம்: கார்த்தி

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. கார்த்தி, தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு, ரகுல் ப்ரீத் சிங், இயக்குநர் ஹெச். வினோத், ஜிப்ரான், கலை இயக்குநர் கதிர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் சந்திப்பில் கார்த்தி பேசியதாவது: 

தீரன் அதிகாரம் ஒன்று வழக்கமான காவல்துறை படங்களில் இருந்து முற்றிலும் புதுமையான படமாக இருக்கும். ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு பின் இந்த படத்தின் படப்பிடிப்புக்காக ராஜஸ்தான், ஜெய்சால்மர் போன்ற இடங்களுக்குப் படப்பிடிப்புக்காகச் சென்றோம். அங்கே கடுமையான வெயில் மற்றும் குளிரைத் தாங்கிக்கொண்டு படப்பிடிப்பை நடத்தினோம். இந்தப் படத்தின் கதை நான் சிறுத்தை படப்பிடிப்பில் இருந்தபோதே எனக்குத் தெரியும். அப்போது வந்த அதே கதை மீண்டும் என்னிடம் வந்தது. நம்மைச் சுற்றியே இந்தக் கதை வந்துகொண்டு இருக்கிறதே என்று நான் யோசித்து இந்தக் கதையில் கண்டிப்பாக நடிக்க வேண்டும் என முடிவு செய்தேன். 

நாம் ரோட்டில் நடந்து செல்லும்போது எதிரே வரும் யாரும் நம்முடைய கண்ணைப் பார்க்கமாட்டார்கள். அதையெல்லாம் தாண்டி ஒருவர் நம்முடைய கண்ணைப் பார்ப்பார். அவரிடம் சென்று பேசினால் அவர் நம்முடைய வாழ்க்கைக்குத் தேவையான பல விஷயங்களை நம்மிடம் சொல்லுவார் என்று என்னிடம் மாற்று உலகத்தைப் பற்றி அதிகம் படித்த என்னுடைய நண்பன் கூறுவார். அதேபோல் தான் இந்த படத்தின் கதை என்னைச் சுற்றியே வந்துக்கொண்டே இருந்தது. நாங்கள் ராஜஸ்தானுக்குப் படப்பிடிப்புக்குச் சென்றபோது அங்கே ஓரிடத்தில் இதோ நம்ம கார்த்தி வரார் என்று தமிழ்க் குரல் கேட்டது. அவர்கள் எல்லாம் யாரென்று பார்த்தால் நம்ம சென்னை, சௌகார்பேட்டை மக்கள்தான். அவர்களிடம் நீங்க எப்படி இங்கே எப்படி என்று கேட்டபோது, பூஜைக்காக வந்தோம், குடும்ப நிகழ்வுக்காக வந்தோம் என்று பதில் அளித்தனர். 

தீரன் அதிகாரம் ஒன்று, முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக இருக்கும். இந்தப் படத்தில் எந்த போலீஸ் படத்தின் சாயலும் தெரியாது. இயக்குநர் என்னிடம் என்ன கேட்டாரோ அதை நான் இந்தப் படத்தில் தந்துள்ளேன். இயக்குநரின் நடிகராகத்தான் இருந்துள்ளேன். இந்தப் படம் பெண்கள் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com