அஜித்தும் இயக்குநர் சிவாவும் இணையும் புதிய படத்துக்கு இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா நியமிக்கப்படவுள்ளார்.
வேதாளம், விவேகம் படங்களுக்கு இசையமைத்த அனிருத், 2 தெலுங்குப் படங்களில் மும்முரமாக உள்ளார். இதனால் இம்முறை அஜித் - சிவா படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளிவருகின்றன. இது குறித்த அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளிவரவுள்ளது. பேரன்பு, சண்டக்கோழி 2, சந்தன தேவன், கொலையுதிர் காலம், இரும்புத் திரை உள்ளிட்ட டஜன் படங்களுக்கும் மேலாக யுவன் இசையமைத்து வருகிறார்.
தீனா, பில்லா, பில்லா 2, மங்காத்தா, ஆரம்பம் ஆகிய அஜித்தின் படங்களுக்கு யுவன் இசையமைத்துள்ளார். இதையடுத்து அஜித் - யுவன் கூட்டணி மீண்டும் இணையவுள்ளது.