வைரலாகும் காஜல் அகர்வாலின் ஃபோட்டோ இதுதான்

ஒரு நடிகைக்கு தோற்றமும் பொலிவும் மிகவும் அவசியம். அதுவே அவர்களின் மார்கெட்டை நிர்ணயிக்கும்
வைரலாகும் காஜல் அகர்வாலின் ஃபோட்டோ இதுதான்

ஒரு நடிகைக்கு தோற்றமும் பொலிவும் மிகவும் அவசியம். அதுவே அவர்களின் திரை வாழ்க்கையை நிர்ணயிக்கும் முக்கியமான தகுதியாகிவிட்டது. நடிப்பு மற்றும் பிற தகுதிகள் அதன் பின்னரே கவனிக்கப்படுகின்றன. 

சமீபத்தில் பிரபல ஆங்கில பத்திரிகையின் அட்டைப் படத்தை அலங்கரித்தார் காஜல் அகர்வால். அவருடைய புதிய லுக்ஸ் அனைவரையும் கவர்ந்தது.

புகைப்படக் கலைஞர் சுபி சாமுவேலின் கைவண்ணத்தில் அந்த ஃபோட்டோ ஷூட்டில் இதுவரை காணாத வகையில் அழகிய தோற்றத்தில் ஜொலித்தார் காஜல். 

சமீபத்திய புகைப்படங்கள் சிலவற்றை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றிய காஜலுக்கு ரசிகர்களிடமிருந்து சில எதிர்வினைகள் கிடைத்தன.

அதிலும் ஒரு மெகா சைஸ் ஸ்பூனை தனது வாய்க்குள் நுழைக்க முயலும் புகைப்படம் ஒன்றை அவர் பதிவிட்ட போது சிலர் ஆபாச கமெண்ட் கொடுத்திருந்தனர்.

காஜல் அதற்கு எவ்வித பதிலும் அளிக்கவில்லை. அந்தப் படத்தையும் நீக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

புகைப்படம் நன்றி - சுபி சாமுவேல், சினிப்ளிட்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com