பாம்பை விட தடுப்பூசி மோசமானது: சர்ச்சை ஆகியுள்ள அறம் பட இயக்குநரின் பேச்சு!

தடுப்பூசி குழந்தையைக் கொல்வதற்கான வேலையைக் கொஞ்சம் கொஞ்சமாகச் செய்கிறது. அதனால் அந்தக் காட்சியை வைத்தேன்...
பாம்பை விட தடுப்பூசி மோசமானது: சர்ச்சை ஆகியுள்ள அறம் பட இயக்குநரின் பேச்சு!

அறம் பட இயக்குநர் கோபி நயினாருடனான கலந்துரையாடல் சென்னையில் நேற்று நடைபெற்றது. அப்போது பார்வையாளர்களின் கேள்விகளுக்கு இயக்குநர் கோபி நயினார் பதில் அளித்தார். 

முதலில் குழந்தை, பாம்பிடமிருந்து தப்பிக்கும். அடுத்தக் காட்சியில் சொட்டு மருந்து எடுத்துக்கொள்ளும். நான் இக்காட்சியை வேறு மாதிரி புரிந்துகொண்டேன் என்கிற கேள்வியை ஒருவர் முன்வைத்தார். அதற்கு அறம் பட இயக்குநர் அளித்த பதில்: 

சொட்டு மருந்து பாம்பை விட மோசமானது. தடுப்பூசி குழந்தைகளுக்கு எதிரானது. தடுப்பூசியால் குழந்தைகளுக்கு எவ்வித பலனும் கிடையாது. படத்தில் பாம்பு கூட குழந்தையைப் பார்த்தவுடன் எதுவும் செய்யாமல் போய்விட்டது. ஆனால் தடுப்பூசி குழந்தையைக் கொல்வதற்கான வேலையைக் கொஞ்சம் கொஞ்சமாகச் செய்கிறது. அதனால் அந்தக் காட்சியை வைத்தேன் என்று கூறினார்.

தடுப்பூசி மருந்துக்கு எதிரான கோபி நயினாரின் இந்தப் பேச்சு சமூகவலைத்தளத்தில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com