10 நாட்களுக்குள் மன்னிப்புக் கேட்கா விட்டால் என்ன செய்வார் பிரகாஷ் ராஜ்?

பாஜக எம்பி உடனடியாகப் 10 நாட்களுக்குள் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்காவிடில் அவர் மீது குற்றவியல் அவதூறு வழக்குத் தொடரப்போவதாக பிரகாஷ்ராஜ் அறிவித்திருக்கிறார்.
10 நாட்களுக்குள் மன்னிப்புக் கேட்கா விட்டால் என்ன செய்வார் பிரகாஷ் ராஜ்?

பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் கொலை விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸை விமர்சித்தும் ஆளும் பாஜாகவை விமர்சித்தும் நடிகர் பிரகாஷ் ராஜ் தொடர்ந்து பேசி வருகிறார். பிரதமர் மோடி செப்டம்பர் 5 ஆம் நாள் கெளரி லங்கேஷ் கொலையை சங் பரிவார் அமைப்பைச் சேர்ந்த சில விஷமிகள் பகிரங்கமாக ட்விட்டரில் கொண்டாடிப் பதிவிட அதைப் பார்த்துக் கொண்டு வாளாவிருக்கிறார் இந்தியப் பிரதமர் மோடி. அவரும் ட்விட்டர் பயன்படுத்தக்கூடியவர் தானே? ஒருவேளை இவற்றையெல்லாம் அவர் வேடிக்கை பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறாரோ?! என்கிற ரீதியில் பிரகாஷ் ராஜ் ட்விட்டரில் கேள்வியெழுப்பியிருந்தார்.

அது மட்டுமல்ல உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை ‘இவரென்ன மாநில முதல்வரா? அல்லது கோயில் பூசாரியா?’ என்றும் ஒரு முறை கேள்வி கேட்டிருந்தார். இதைக்கண்டு பொங்கிய பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா, அரசியல் ரீதியாக அல்லாது நடிகர் பிரகாஷ் ராஜை அவரது அந்தரங்க வாழ்வைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில் ட்ரால் செய்து ட்விட்டரில் வெளியிட்டார். இதனால் கொதித்துப் போன பிரகாஷ் ராஜ். பாஜக எம்பி உடனடியாகப் 10 நாட்களுக்குள் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்காவிடில் அவர் மீது குற்றவியல் அவதூறு வழக்குத் தொடரப்போவதாக பிரகாஷ்ராஜ் அறிவித்திருக்கிறார்.

பிரகாஷ் ராஜின் கொதிப்பிற்கு காரணம், எம்பி சிம்ஹா, ‘ மகன் துர்மரணம் அடைந்ததும், தன் மனைவியை விட்டு விட்டு ஒரு டான்ஸரின் பின்னால் ஓடிய பிரகாஷ் ராஜ் போன்ற ஒரு சாமானிய நடிகருக்கு நாட்டின் பிரதமரான மோடியையும், மாநில முதல்வரான யோகியையும் வரம்பு மீறி கேள்வி கேட்க உரிமை இருக்கிறதென்றால், பிறகு பிரகாஷ் ராஜைக் கேள்விக்கு உள்ளாக்கவும் எல்லோருக்கும் உரிமை இருக்கிறது தானே?!’ இன்று தனது குடும்பத்திற்கு நெருக்கமான கெளரி லங்கேஷ் கொலைக்காக நியாயம் கேட்கும் பிரகாஷ் ராஜ், அன்று தான் வசிக்கும் பகுதிக்கு வெகு அருகில் ஆர் எஸ் எஸ் உறுப்பினர்கள் பலர் இரக்கமின்றி கொல்லப்பட்ட போது எங்கே போயிருந்தார்?!’ என்று பிரகாஷ் ராஜின் குற்றச்சாட்டுக்கு பதில் கேள்வி எழுப்பி ட்விட்டர் பதிவிட்டிருந்தார்.

அது மட்டுமல்ல, பிரகாஷ் ராஜ் கேட்டுக்கொண்டதற்கிணங்க நான் 10 நாட்களுக்குள் மன்னிப்புக் கேட்காவிட்டால், பிரகாஷ் ராஜால் என்ன செய்ய முடியும்?! குற்றவியல் அவதூறு வழக்குகள் எல்லாம் என்னை என்ன செய்யும்?! என்றும் கூட ட்விட்டரில் கேள்வி எழுப்பி இருந்தார்.

ஆனால் என்ன காரணத்தாலோ அந்த ட்விட்டர் செய்தி தற்போது நீக்கப்பட்டிருக்கிறது. அதற்கும் பதிலடி கொடுக்கும் விதமாகப் பிரகாஷ் ராஜ்;

ட்விட்டரில் வெளியிட்டிருந்த அவதூறை வேண்டுமானால் உங்களால் யாருக்கும் தெரியாமல் டெலிட் செய்து நீக்கி இருக்க முடியும். ஆனால், நீங்கள் வெளியிட்ட பதிவால் மக்கள் உள்ளங்களைச் சென்றடைந்திருக்கும் வதந்திகளை எல்லாம் யர் போய் நீக்க முடியும். என்னைக் கேள்வி கேட்க என் மகள் இருக்கிறார். நீங்கள் யார் என் அந்தரங்க வாழ்க்கை பற்றியெல்லாம் பொது வெளியில் அவதூறு பரப்ப?! என்று ஆத்திரமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com