அமெரிக்க ராக் பாடகர் டாம் பெட்டி காலமானார்!

அமெரிக்காவின் பிரபல ராக் பாடகரான டாம் பெட்டி (Tom Petty) தனது 66 வயதில் காலமானார். 
அமெரிக்க ராக் பாடகர் டாம் பெட்டி காலமானார்!

அமெரிக்காவின் பிரபல ராக் பாடகரான டாம் பெட்டி (Tom Petty) தனது 66 வயதில் மாரடைப்பால் காலமானார். 

ராக் அண்ட் ரோல் லெஜண்டான டாம் பெட்டிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். டாம் பெட்டி கலிபோர்னியாவின் மாலிபு நகரில் வசித்து வந்தார்.

நேற்று அதிகாலை டாம் பெட்டிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் மாலை அவரது உயிர் பிரிந்தது.

உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தன் இசைக்குழுவினர் சூழ அவரது மரணம் அமைதியாக ஏற்பட்டது என்று அவரது உதவியாளர் தெரிவித்தார்.  அவரது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள செய்தி இது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com