சர்வதேசத் திரைப்பட விழாவைத் துவக்கி வைக்கும் பெருமை பெற்ற தென்னிந்திய நகைச்சுவை நடிகர்...

அக்டோபர் 6 ஆம் தேதி, மாலை சியாட்டில் ஆர்ட் மியூசியத்தில் நடைபெறவிருக்கும் 12 ஆவது தெற்காசியத் திரைவிழாவை பிரம்மானந்தம் துவக்கி வைக்கிறார். 
சர்வதேசத் திரைப்பட விழாவைத் துவக்கி வைக்கும் பெருமை பெற்ற தென்னிந்திய நகைச்சுவை நடிகர்...

தெற்காசியத் திரைப்பட விழா, தென்னகத்துத் திரைக்கலைஞர்களை கெளரவிக்கும் விதத்தில் ஆண்டுதோறும் தெற்காசிய நாடுகளில் ஒன்றில் நடத்தப் பட்டு வருகிறது. இந்த வருடம் சியாட்டிலில் நடைபெறவிருக்கும் தெற்காசியத் திரைப்பட விழாவைth துவக்கி வைக்கும் பெருமை தெலுங்குத் திரையுலகின் நகைச்சுவை மன்னர் பிரம்மானந்தத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது தனது ‘ஆச்சாரியின் அமெரிக்க யாத்திரை’ திரைப்படத்துக்காக சாட்ஷாத் அமெரிக்காவில் முகாமிட்டிருக்கும் பிரம்மானந்தத்துக்கு வழங்கப்பட்டுள்ள இந்த அருமையான வாய்ப்பு அவரது திறமைக்கு கிடைத்த ஒரு மாபெரும் அங்கீகாரமாகக் கருதப்படுகிறது. தனது அமெரிக்கத் தங்கலினிடையே 12 ஆவது தெற்காசியத் திரைவிழாவை துவக்கி வைக்கும் பெருமை கிடைத்தது குறித்து பிரம்மானந்தம் மிகுதியான சந்தோசத்தில் இருக்கிறார். 

அக்டோபர் 6 ஆம் தேதி, மாலை சியாட்டில் ஆர்ட் மியூசியத்தில் நடைபெறவிருக்கும் 12 ஆவது தெற்காசியத் திரைவிழாவை பிரம்மானந்தம் துவக்கி வைக்கிறார். 

இதன் மூலமாக சர்வ தேசத் திரைவிழாவைத் துவக்கி வைக்கும் பெருமை கொண்ட இரண்டாவது தெலுங்கு நடிகர் எனும் பெயர் பிரம்மானந்தத்துக்கு கிடைக்கவிருக்கிறது. அப்படியானால் முதல் தெலுங்கு நடிகர் யார்? என்கிறீர்களா? அது வேறு யாருமில்லை. நமது பன்முக நடிகர் எஸ்.வி. ரங்காராவ் தான். 1964 ஆம் ஆண்டு ஜகார்த்தாவில் நடைபெற்ற சர்வதேசத் திரைப்படவிழாவைத் துவக்கி வைக்கும் பெருமை அந்நாட்களில் பழம்பெரும் நடிகர் எஸ்.வி.ரங்காராவுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com