விலை உயர்வு: சினிமா டிக்கெட்டின் புதிய கட்டணம்!

விலை உயர்வு: சினிமா டிக்கெட்டின் புதிய கட்டணம்!

உயர்மட்டக் குழுவின் பரிந்துரையின்படி, தற்போது உள்ள கட்டணத்தில் 25 சதவீதம் வரை  உயர்த்திக்கொள்ள அனுமதி

தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் டிக்கெட் விலையை உயர்த்திக்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

சென்னையில் உள்ள மல்டிபிளெக்ஸ் திரையரங்குகளில் குறைந்தபட்ச டிக்கெட் கட்டணம் ரூ. 15, அதிகபட்சக் கட்டணம் ரூ. 150 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது ரூ. 120 ஆக உள்ள டிக்கெட் விலை ரூ. 150 ஆகவும், ரூ. 95 ஆக உள்ள டிக்கெட் விலை ரூ.118.80 ஆகவும், ரூ. 85 ஆக உள்ள டிக்கெட் விலை ரூ.106.30 ஆகவும், ரூ.10 ஆக உள்ள டிக்கெட் விலை ரூ.15-ஆகவும் நிர்ணயம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

உயர்மட்டக் குழுவின் பரிந்துரையின்படி, தற்போது உள்ள கட்டணத்தில் 25 சதவீதம் வரை  உயர்த்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு திங்கள் கிழமை முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சினிமா டிக்கெட்டின் புதிய கட்டணம்

பழைய கட்டணம்புதிய கட்டணம்புதிய கட்டணம் + ஜிஎஸ்டி
ரூ. 120150ரூ. 192
ரூ. 95ரூ. 118.80ரூ. 152.06
ரூ. 85ரூ. 106.30ரூ. 136.06
ரூ. 10ரூ. 15ரூ. 17.70

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com