ஏழை மக்களுக்கு எட்டாக்கனியான சினிமா: இயக்குநர் சீனு ராமசாமி வருத்தம்! 

தமிழக அரசின் தியேட்டர் கட்டண உயர்வால் ஏழை நடுத்தர மக்களுக்கு சினிமா எட்டாக்கனியாகி விட்டது என்று பிரபல இயக்குநர் சீனு ராமசாமி வருத்தம் தெரிவித்துள்ளார்.  
ஏழை மக்களுக்கு எட்டாக்கனியான சினிமா: இயக்குநர் சீனு ராமசாமி வருத்தம்! 

சென்னை: தமிழக அரசின் தியேட்டர் கட்டண உயர்வால் ஏழை நடுத்தர மக்களுக்கு சினிமா எட்டாக்கனியாகி விட்டது என்று பிரபல இயக்குநர் சீனு ராமசாமி வருத்தம் தெரிவித்துள்ளார்.  

தமிழக அரசு நேற்று முன்தினம் திரையரங்குகளுக்கான டிக்கெட் கட்டணத்தை 25% உயர்த்தி இருக்கிறது. இதனால் தமிழ் திரையுலகம் அதிர்ச்சியில் இருக்கிறது.

இது குறித்து பிரபல இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:

தியேட்டர் கட்டண உயர்வால் ஏழை நடுத்தர மக்களுக்கு சினிமா எட்டாக்கனியாகி விட்டது. இதனால் பார்க்க முடியாத மக்களால் சினிமாத் தொழில் அழிய நேரும். அதிக கட்டணத்தால் வெகுஜன மக்களுக்கு தியேட்டர் என்றாலே அலர்ஜி ஆகும், உற்பத்தி விநியோகம், தொழிலாளர்கள் ஏன் தமிழ் ராக்கர்ஸுக்கும் பாதிப்புதான்.

நகர மால்களில் சினிமா பார்ப்போரை ஊக்கப்படுத்த ஜனங்களுக்கு பாதி பார்க்கிங் கட்டணமும், பாப்கார்ன் நியாயமான விலையில் தர அன்போடு வேண்டுகிறேன்

இவ்வாறு சீனு ராமசாமி தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com