"மெர்சல்' படத்தை இணையதளங்களில் வெளியிடத் தடை

விஜய் நடித்து தீபாவளியன்று திரைக்கு வரவுள்ள "மெர்சல்' படத்தை இணையதளத்தில் பதிவேற்றி வெளியிடத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
"மெர்சல்' படத்தை இணையதளங்களில் வெளியிடத் தடை

விஜய் நடித்து தீபாவளியன்று திரைக்கு வரவுள்ள "மெர்சல்' படத்தை இணையதளத்தில் பதிவேற்றி வெளியிடத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
"மெர்சல்' திரைப்படத்தைத் தயாரித்த தேனாண்டாள் பிலிம்ஸ் என்.ராமசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், நடிகர் விஜய் நடிப்பில் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள "மெர்சல்' திரைப்படம் வரும் தீபாவளி முதல் திரையிடப்படவுள்ளது. வழக்கமாக புதுப்படங்களை இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியிடுவதால் படத்தயாரிப்பாளர்களுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே "மெர்சல்' திரைப்படத்தை இணையதளங்களில் திருட்டுத்தனமாக வெளியிட சம்பந்தப்பட்ட இணைய சேவை நிறுவனங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், "மெர்சல்' திரைப்படத்தை இணையதளங்களில் வெளியிடுவதற்கு 2 ஆயிரத்து 650 இணையதள சேவை நிறுவனங்களுக்கு தடை விதித்தும், இதுதொடர்பாக பதிலளிக்க உத்தரவிட்டும் வழக்கு விசாரணையை வரும் 23}ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
"மெர்சல்' படம் தொடர்பான மற்றொரு வழக்கு: ஏ.ஆர்.பிலிம் ஃபேக்டரி உரிமையாளர் ராஜேந்திரன் என்பவர் "மெரசலாயிட்டேன்' என்ற தலைப்பை ஏற்கெனவே தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளதால், "மெர்சல்' படத்தின் தலைப்பைப் பயன்படுத்தவும், படத்தை வெளியிடவும் தடை விதிக்கக் கோரி வழக்குத் தொடர்ந்திருந்தார். 
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், "மெரசலாயிட்டேன்'" என்ற பெயருக்கும் "மெர்சல்" என்ற பெயருக்கும் வித்தியாசம் உள்ளது. இந்த வழக்கில் எதிர்மனுதாரர், தனது படத்தின் தலைப்புக்கு வணிகக் குறியீடு வாங்கியுள்ளதால் படத்துக்குத் தடை விதிக்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 
இந்நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து, ராஜேந்திரன் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கு வெள்ளிக்கிழமை, நீதிபதிகள் ராஜீவ் ஷக்தேர், சதீஷ்குமார் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் இந்த வழக்கில் தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்து, மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com