பிக் பாஸ் ஒரு முடிந்து விட்ட விளையாட்டு: கிண்டல் செய்த நெட்டிசன்களுக்கு காயத்ரி ரகுராம் பதில்! 

பிக் பாஸ் ஒரு முடிந்து விட்ட விளையாட்டு; அவ்வளவுதான், போய் வேலையை பாருங்கள் என்று தன்னை தொடர்ந்து கிண்டல் செய்த நெட்டிசன்களுக்கு காயத்ரி ரகுராம் பதில் அளித்துள்ளார்.
பிக் பாஸ் ஒரு முடிந்து விட்ட விளையாட்டு: கிண்டல் செய்த நெட்டிசன்களுக்கு காயத்ரி ரகுராம் பதில்! 

சென்னை: பிக் பாஸ் ஒரு முடிந்து விட்ட விளையாட்டு; அவ்வளவுதான், போய் வேலையை பாருங்கள் என்று தன்னை தொடர்ந்து கிண்டல் செய்த நெட்டிசன்களுக்கு காயத்ரி ரகுராம் பதில் அளித்துள்ளார்.

புகழ்பெற்ற 'பிக் பாஸ்' தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இருந்து நடன இயக்குநர் காயத்ரி ரகுராம் வெளியேறியதிலிருந்தே, சமூக வலைதளத்தில் அவர் தொடர்ச்சியாக கிண்டல்களுக்கு ஆளாகி வந்தார். இதனால் அவ்வப்போது தன்னை கிண்டல் செய்வோருக்கு காயத்ரி ரகுராம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வந்தார்.

இந்நிலையில் ’பிக் பாஸ்’ நிகழ்ச்சி முடிந்து இத்தனை காலம் ஆனா பின்னும் அவரைக் குறித்த கிண்டல்கள் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இதனால் அவரைக் கிண்டல் செய்வோரை கடுமையாக திட்டி, அறிவுரை கூறி காயத்ரி ரகுராம் ட்வீட்களை பதிவிட்டுள்ளார். தொடர் ட்வீட்டுகளில் அவர் கூறியுள்ளதாவது:

முகம் காட்டாமல் என்னைத் தொடர்ந்து கிண்டல் செய்பவர்களைப் பார்க்க விரும்புகிறேன். மற்றவர்களிடம் குறையை மட்டுமே பார்க்கும் அந்த தூய்மையானவர்களை கண்டிப்பாக சந்திக்க வேண்டும்.

ஒருவரைப் தொடர்ந்து ஆன்லைனில் தாக்க நீங்கள் எவ்வளவு வெட்டியாக இருக்க வேண்டும்? உங்களிடம்  சொல்ல விரும்புவது இதுதான். என்னிடம் உங்கள் நேரத்தை வீணாக்குகிறீர்கள்.

பிக் பாஸ் ஒரு விளையாட்டு. அது இப்போது முடிந்து விட்டது. அவ்வளவுதான். போய் உங்கள் வாழ்க்கையைப் பாருங்கள்.

சமூகத்தின் முக்கியமான பிரச்சினைகளுக்கு போராடுங்கள். குழந்தைத் தொழிலாளர்கள், குழந்தைகள் மீதான வன்முறை, கல்வி, பெண்கள் மீதான வன்முறை, வன்கொடுமை, விவசாயிகள், நீட் என பலப் பிரச்சினைகள் இருக்கின்றன.

நான் ஏதோ கோபத்தில் வெறுப்பில் இவ்வாறு இருப்பதாக பேசுவதாக நீங்கள் நினைக்கலாம். ஆனால் உண்மையில் நான் இந்த புகழ் வெளிச்சத்தை மிகவும் கொண்டாடிக் கொண்டிருக்கிறேன்.

முதலில் எனக்கும் அது விளையாட்டு என்று தெரியவில்லை. நான் யார் மீதும் பழி போடவில்லை. அது விளையாட்டு என்று புரிந்துகொள்ளவே எனக்கு நேரமானது.  நீங்கள் எல்லாம் ஒரு சாதாரண தொலைக்காட்சி விளையாட்டு நிகழ்ச்சிக்கு அடிமையாகிவிட்டீர்கள்.

இவ்வாறு காயத்ரி ரகுராம் தனது பதிவுகளில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com