2.0 இசை வெளியீட்டு நிகழ்ச்சியின் இருக்கை கட்டணம் எவ்வளவு தெரியுமா?

ரஜினி - ஷங்கர் கூட்டணியில் உருவாகிவரும் 2.O படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ்
2.0 இசை வெளியீட்டு நிகழ்ச்சியின் இருக்கை கட்டணம் எவ்வளவு தெரியுமா?

ரஜினி - ஷங்கர் கூட்டணியில் உருவாகிவரும் 2.O படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஏ.ஆர். ரஹ்மான் இசை, நீரவ் ஷா ஒளிப்பதிவு, ஆண்டனி எடிட்டிங் என வெற்றிக் கூட்டணியில் உருவாகி வரும் 2.0 படம்தான் ரசிகர்களின் 2018-ம் ஆண்டின் ஆகப் பெரிய எதிர்ப்பார்ப்பு எனலாம். இப்படத்தின் ஒலி வடிவமைப்பாளராக ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டியும் பணியாற்றுகிறார்.

அக்டோபர் 27-ம் தேதி துபையில் உள்ள புர்ஜ் பார்க்கில் (Burj Park) 2.0 படத்தின் பாடல்கள் பிரம்மாண்டமாக வெளியிடப்பட உள்ளன. அதற்கு முந்தைய நாளில், அக்டோபர் 26-ம் தேதி உலகின் மூன்றாவது உயரமான ஹோட்டலான Burj Al Arab Jumeirah வில் இந்நிகழ்ச்சி குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறும். ரஜினி, ஷங்கர், ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட படக் குழுவினர் இவ்விழாவில் பங்கேற்கிறார்கள். இது குறித்த தகவலை இயக்குனர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்நிகழ்வில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இன்னிசை நேரலையாக நடைபெறும்.

இந்த இசை வெளியீட்டு விழாவிற்கான பட்ஜெட் 12 கோடி ரூபாய் என லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான இருக்கை கட்டணம் தற்போது படக்குழுவினரால் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆறு நபர்கள் அமரக் கூடிய இருக்கைக்கு 3,71,625 ரூபாய் எனவும், எட்டு பேர் உட்காரக் கூடிய இருக்கைக்கு 4,69,588 ரூபாய் எனவும் 12 நபர்கள் அமரக் கூடிய இருக்கைக்கு 6,82,232 ரூபாய் என்றும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. 

2.0 படத்தின் டீசர் நவம்பர் 22-ம் தேதி ஹைதராபாத்திலும், ட்ரைலர் ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ம் தேதி  சென்னையிலும் வெளியிடப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்படத்தின் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளின் சாட்டிலைட் உரிமத்தை ஜீ நெட்வொர்க் 110 கோடி ரூபாய்க்குப் பெற்றுள்ளது. 2.0-வின் டிஜிட்டல் உரிமத்தை அமேசான் நிறுவனம் மிகப் பெரிய விலையில்  பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com