நீக்கப்பட்ட மெர்சல் படக் காட்சிகள் இணையத்தில் வெளியிடப்படுகின்றனவா?: படத்தொகுப்பாளர் மறுப்பு!

மெர்சல் படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகள் குறித்து நான் எவ்வித அறிக்கையும் தரவில்லை... 
நீக்கப்பட்ட மெர்சல் படக் காட்சிகள் இணையத்தில் வெளியிடப்படுகின்றனவா?: படத்தொகுப்பாளர் மறுப்பு!

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் - மெர்சல். இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களுக்கு பாஜக கட்சித் தலைவர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்து வருகின்றனர். மெர்சல் படத்தில் மருத்துவர்களை பற்றி உண்மையற்ற, மலிவான காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக மருத்துவர்கள் சங்கமும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதனால் பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் படத்தொகுப்பாளர் ஆண்டனி ரூபன், மெர்சல் படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகள் இணையத்தில் விரைவில் வெளியிடப்படும் எனக் கூறுவதாகப் பேட்டி ஒன்று வெளியானது. ஆனால், தான் அதுபோல எதுவும் கூறவில்லை என ரூபன் மறுத்துள்ளார்.

இதுபற்றி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவர் விளக்கம் அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: 

மெர்சல் படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகள் குறித்து நான் எவ்வித அறிக்கையும் தரவில்லை. படத்தின் நீளம் கருதி சில பாடல்களும் நகைச்சுவைக் காட்சிகளும் வெட்டப்பட்டுள்ளன. நீக்கப்பட்ட காட்சிகளோ பாடல்களோ படக்குழுவினரால் தற்போதைக்கு வெளியிடுவதாக இல்லை. எனவே வதந்திகளைப் பரப்பவோ நம்பவோ வேண்டாம் எனக் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com