இப்படியா நாகரிகமின்றி எழுதுவது? நவாசுதீன் சித்திக்குக்கு நிஹாரிகா தந்த பதிலடி!

பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக்கின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மையமாக வைத்து
இப்படியா நாகரிகமின்றி எழுதுவது? நவாசுதீன் சித்திக்குக்கு நிஹாரிகா தந்த பதிலடி!

பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக்கின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மையமாக வைத்து சுயசரிதைப் புத்தகமொன்று 'ஒரு சாதாரண வாழ்க்கை: ஒரு நினைவு!' (An Ordinary Life: A Memoir!) என்ற பெயரில் வெளியானது. பாலிவுட்டில் சாதாரண நடிகராக அறிமுகமாகி தற்போது தனது நடிப்புத் திறமையால் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ள நவாசுதீனின் வாழ்க்கையின் சில பக்களை இப்புத்தகம் திறந்து காட்டுகிறது. சான்பிரான்சிஸ்கோவில் வசித்துவரும் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ரிதுபர்னா சாட்டர்ஜி இப்புத்தகத்தை நவாசுதீனுடன் இணைந்து எழுதியுள்ளார்.

இப்புத்தகத்தின் ஒரு பகுதியில் மிஸ் லவ்லி என்ற படத்தில் நவாசுதீன் நடித்த போது அப்படத்தின் கதாநாயகியாக நிஹாரிகா சிங் நடித்தார். அவர்களின் பழக்கம் காதலாகியது. இருவரும் ஒருகட்டத்தில் ஒரே வீட்டில் வாழத் தொடங்கினார்கள். ஆனால் ஒரு வருடம் கூட நீடிக்காத அவ்வுறவு முடிவுக்கு வந்தது. 

அப்புத்தகத்தில் நவாசுதீன், 'நிஹாரிகா என்னை வீட்டிற்கு அழைத்தார், வீடு முழுவதும் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்திருந்தார். பின் நாங்கள் உறவு வைத்துக் கொண்டோம், அதை தொடர்ந்து ஒரு வருடங்கள் ஒன்றாக இருந்தோம்’என்று எழுதியுள்ளார்.

இது குறித்து நிஹாரிகா நவாசுதீனுக்கு பதிலடி கொடுத்துள்ளார். ‘ஆம், நானும் நவாசுதீனும் உறவில் இருந்தது உண்மைதான், ஆனால், நான்தான் மயக்கி வீட்டிற்கு அழைத்து வந்தேன் என்பதைப் போல எழுதப்பட்டிருப்பதைப் படிக்கும் போது எனக்கு சிரிப்பு தான் வருகிறது’ என்று கூறியுள்ளார்.

நவாசுதீனுக்கு திருமணம் ஆன விஷயத்தை என்னிடம் மறைத்ததால் எங்களுக்குள் கருத்து வேற்றுமை ஏற்பட்டு அவரை நான் பிரிந்தேன். அதைப் பற்றி எதுவும் குறிப்பிடாமல், இப்படி உண்மைக்குப் புறம்பான சில விஷயங்களை அப்பட்டமாக திரித்துக் கூறியிருப்பது தவறு’ என்றார். இதற்கு பதிலடியாக நவாசிதீன் மீதும் அப்புத்தகப் பதிப்பாளரின் மீதும் வழக்குத் தொடரப் போவதாகவும் நிஹாரிகா கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com