ஜெயம் ரவி நடிக்கும் டிக் டிக் டிக்கில் பயன்படுத்தப்பட்ட புதிய கருவி என்ன?

ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ், ஆரோன் அஜீஸ் ஆகியோர் நடித்து சக்தி செளந்தர் ராஜன்
ஜெயம் ரவி நடிக்கும் டிக் டிக் டிக்கில் பயன்படுத்தப்பட்ட புதிய கருவி என்ன?

ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ், ஆரோன் அஜீஸ் ஆகியோர் நடித்து சக்தி செளந்தர் ராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘டிக்:டிக்:டிக். இதில் ஜெயம் ரவியின் மகன் ஆரவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்தை நேமிசந்த் ஜபக் தயாரித்துள்ளார். 

மிருதன் படத்துக்குப் பிறகு சக்தி செளந்தர் ராஜன் - ஜெயம் ரவி இப்படத்தில் இணைந்துள்ளார்கள். ஜெயம் ரவியின் அர்ப்பணிப்பும், அபார உழைப்பும், நடிப்பின் மீது அவருக்குள்ள தீவிர ஈடுபாட்டையும் பார்த்து பிரமித்தேன் என்றார் இயக்குனர் சக்தி செளந்தர் ராஜன்.

'டிக் டிக் டிக் விண்வெளியை மையப்படுத்தி தயாராகும் முதல் த்ரில்லர் வகைமைப் படம். படத்தின் 70 சதவிகிதப் படப்பிடிப்பு முடியும் வரை ரவி பெரும் சிரமத்துக்கு உள்ளானார். அவருக்கு அணிவிக்கப் பட்ட ஸ்பேஸ் உடையை அணிந்து கொண்டால் உட்கார முடியாது. பெரும்பாலும் ரவி நின்று கொண்டே தான் இருந்தார். தவிர அந்த உடையைப் போடவும் அவிழ்க்கவும் கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாகும். பாத்ரூம் போகவேண்டும் என்றால் கூட கஷ்டம் தான். ரவி பொறுமையுடன் இதையெல்லாம் ஏற்றுக் கொண்டு ஷூட்டிங்கில் சிறப்பான ஒத்துழைப்பைத் தந்தார். இது ஒரு கடினமான அனுபவம்’ என்றார் சக்தி.

'சண்டைக் காட்சிகளைப் படம் பிடிப்பதற்காக ஒரு ஸ்பெஷல் கருவியை நாங்கள் இறக்குமதி செய்தோம், பொதுவாக சண்டைக் காட்சிகளில் கயிறு பயன்படுத்தும்போது, முன்னும் பின்னுமாக, அல்லது இடது வலமாக நகர்த்த மட்டுமே முடியும், ஆனால் இந்தக் கருவியின் மூலம் 360 டிகிரிக்கு நகர்த்த முடிகிறது’ என்று கூறினார்.

சக்தியின் நடன இயக்குனர் மற்றும் சண்டைப் பயிற்சியாளர் அந்தக் கருவியை எப்படி பயன்படுத்துவது என்று ஒரு வாரம் கற்றுக் கொண்டார். அதன் பின்னரே வார இறுதியில் ஜெயம் ரவிக்கு டெமோ கொடுக்கத் தயாரானார்களாம். 

ரவி படப்பிடிப்புக்கு வந்தபோது, அந்தக் கருவியை தானே முயற்சி செய்து பார்க்க விரும்பினார், அதைப் பயன்படுத்த தொடங்கியதும், அதைச் சுலபமாகவே கையாள முடியும் என்பதை உணர்ந்தார், மிகக் குறைவான நேரத்தில் கற்றுக் கொண்டதுடன் உடனடியாகப் படப்பிடிப்பைத் தொடங்கவும் தயாராகிவிட்டார். அந்தப் புதிய கருவி அவருக்கு நன்றாகவே செட் ஆகிவிட்டது.

ஜெயம் ரவியின் மகன் ஆரவ் இப்படத்தில் அவருக்கு மகனாக நடிக்கிறார். அவர்களுக்கு இடையேயான காட்சிகள் பார்வையாளர்களின் இதயங்களைத் தொடும் என்றும் சக்தி செளர்ந்தர் ராஜன் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com