கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவுடன் காதலா? பரினீத்தி சோப்ராவின் விளக்கம்

என் வாழ்க்கையின் மிக அற்புதமான கட்டத்தில் நான் இருக்கிறேன், ஆஸ்திரேலியா
கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவுடன் காதலா? பரினீத்தி சோப்ராவின் விளக்கம்

'என் வாழ்க்கையின் மிக அற்புதமான கட்டத்தில் நான் இருக்கிறேன், ஆஸ்திரேலியா சுற்றுலாத் துறையினரின் ‘ப்ரெண்ட் ஆஃப் ஆஸ்திரேலியா’ Friend of Australia" (FOA) குழுவின் முதல் இந்திய பெண் தூதராக நியமிக்கப்பட்டுள்ளேன்.  இந்த கௌரவம் எனக்குக் கிடைத்ததில் பெருமிதமாக உணர்கிறேன்' என்றார் பாலிவுட் நடிகை பரினீத்தி சோப்ரா.

சினிமாவைப் பொருத்தவரையில் தற்போது நான் 'சந்தீப் அவுர் பிங்க் ஃபாரார்' என்ற படத்தில் நடித்து வருகிறேன். உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் எனக்கு சவாலாக இருக்கும் படமிது. இது ஒரு தீவிரமான படம், இதில் நடிப்பதில் ஆர்வமாக உள்ளேன்.

அந்தப் படத்தினைத் தொடர்ந்து, 'நமஸ்தே கனடா' படத்தில் நடிக்கிறேன். இது ஒரு ஜாலியான படம். இந்த இரண்டு படங்களிலும் நான் அர்ஜுன் கபூருக்கு ஜோடியாக நடிக்கிறேன்’ என்றார் பரினீத்தி.

ஜியோமி செல்போன் விளம்பரத்திற்காக பரினீத்தி டிவிட்டரில் ஒரு பதிவைப் போட, அதற்கு கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா பதில் அளிக்க, இவர்கள் இருவரும் பேசிக் கொண்டதை வைரலாக்கியதுடன், அவர்களுக்குள் காதல் என்ற வதந்தியைப் பரப்பிவிட்டார்கள் நெட்டிசன்கள். 

பாலிவுட் நடிகை ஒருவரும், கிரிக்கெட் வீரரும் காதலிப்பது புதிய விஷயமல்ல. ஆனால் உண்மையல்லாத ஒரு விஷயத்துக்கு இவ்வளவு கவனம் கொடுப்பதும் சரியல்ல என்ற பரினீத்தி இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில்  தான் மணமானவரா இல்லையா என்பது வாதமல்ல. ஆனால் ஹர்திக் பாண்டியாவை தான் காதலிக்கவில்லை என்று ஒரு பேட்டியில் கூறினார்.

இவரது சமீபத்திய படமான மேரே பியாரி பிந்து எதிர்ப்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. தேவையற்ற சர்ச்சைகளில் சிக்கியும், படத் தோல்விகளாலும், சற்று மன வருத்தத்தில் இருந்த பரினீத்திக்கு சமீபத்திய புதிய வாய்ப்புக்கள் மகிழ்ச்சி தரும் விதத்தில் அமைந்துள்ளது. 

பரினீத்தி சோப்ரா பிரபல நடிகை பிரியங்கா சோப்ராவின் கசின் சிஸ்டர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com