ரஜினி உங்களுக்குப் புரியவைப்பார்: இயக்குநர் பா. இரஞ்சித்துக்கு எஸ்.வி. சேகர் பதில்!

சாதி குறித்த ட்விட்டர் உரையாடலில் உங்கள் நாயகன் புரிய வைப்பார் என இயக்குநர் பா. இரஞ்சித்துக்கு நடிகர் எஸ்.வி. சேகர் கூறியுள்ளார்.
ரஜினி உங்களுக்குப் புரியவைப்பார்: இயக்குநர் பா. இரஞ்சித்துக்கு எஸ்.வி. சேகர் பதில்!

சாதி குறித்த ட்விட்டர் உரையாடலில் உங்கள் நாயகன் புரிய வைப்பார் என இயக்குநர் பா. இரஞ்சித்துக்கு நடிகர் எஸ்.வி. சேகர் கூறியுள்ளார்.

சென்னை வடபழனி ஆர்கேவி ஸ்டூடியோவில் இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் சார்பில் அரியலூர் மாணவி அனிதாவுக்கான அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் இயக்குநர் அமீர் பேசியதாவது: நாம் அனைவரும் இங்கு அனிதாவுக்காகக் கூடியிருக்கிறோம். சாதிகளைக் கடந்து சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.  நாம் தமிழனாகச் சமத்துவம் அடைந்துள்ளோம் என்றார். 

அமீரின் இப்பேச்சுக்கு பா. இரஞ்சித் எதிர்ப்பு தெரிவித்து மேடையிலேயே அவருடன் கருத்து மோதலில் ஈடுபட்டார். அதன்பிறகு பா. இரஞ்சித் பேசியதாவது:  

இன்னும் எத்தனை நாள் சமூக நீதியற்ற சமூகமாக இருக்கப் போகிறோம்? தமிழனாக இருந்து நான் சொல்கிறேன் - தமிழ்த் தேசியம் எட்டாக்கனிதான். சாதியாகப் பிரிந்திருக்கும் வரை சாதியாகப் பிரிந்திருக்கும் வரை உன்னால் தமிழ்த் தேசியத்தைத் தொடமுடியாது. 

தமிழ், தமிழன் என்று இன்னும் எத்தனை நாள் பேசிக்கொண்டிருக்கப் போகிறீர்கள்? ஒவ்வொரு தெருவிலும் சாதி உள்ளது. தமிழன் சாதியால் பிரிந்துள்ளான். ஒப்புக்கொள்ளுங்கள். அனிதாவின் மரணத்திலாவது நாம் நம்மை சுயபரிசோதனை செய்துகொள்ளவேண்டும் என்று ஆவேசமாகப் பேசினார். இதையடுத்து பா.இரஞ்சித் - அமீர் இடையேயான கருத்து மோதல் குறித்து சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இயக்குநர் பா. இரஞ்சித்துக்கு நடிகர் எஸ்.வி. சேகர் ட்விட்டரில் கூறியதாவது:

தன்னை தமிழன் என்று சொல்லாமல் தலித் என்று சொல்லும் ரஞ்சித். தன் ஜாதியைப் பெருமையாக சொல்லும் ரஞ்சித்துக்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும் என்று ட்வீட் வெளியிட்டிருந்தார்.

இதற்கு ட்விட்டரில் பதில் அளித்த இயக்குநர் பா. இரஞ்சித், தலித் என்பது சாதியல்ல, ஆரியம்- சாதியம் ஒழிக்கும் விடுதலைக் கருத்தியல் என்று கூறினார். 

இதற்கு மேலும் பல ட்வீட்கள் மூலம் பதில் அளித்த எஸ்.வி. சேகர் கூறியதாவது: தம்பி, தலித் என்று சொன்னது நீங்கள்தான். ஆரியம்-சாதியம் ஒழிக்கும் விடுதலை கருத்தியல், நடைமுறை சாத்தியமில்லா கருத்தியல். காலம் உணர்த்தும். வெற்றி வேகம் தங்களின் பதில். வயதும் அனுபவமும் கூடக்கூட தெளிவு பெறுவீர்கள். என் நண்பர் தங்களின் நாயகன் புரிய வைப்பார் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com