1 கோடி யூடியூப் பார்வைகள்: ஷெரில் பங்கேற்ற ‘ஜிமிக்கி கம்மல்’ வீடியோ சாதனை!

அக்கல்லூரி ஆசிரியரான ஷெரில் ஒரு கதாநாயகிக்கு உரிய அந்தஸ்தைப் பெற்றுள்ளார்...
1 கோடி யூடியூப் பார்வைகள்: ஷெரில் பங்கேற்ற ‘ஜிமிக்கி கம்மல்’ வீடியோ சாதனை!

மோகன்லால் நடித்துள்ள வெளிபாடின்டெ புஸ்தகம் (Velipandinte Pusthakam) என்கிற மலையாளப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘என்டம்மேடெ ஜிமிக்கி கம்மல்’ பாடலைத் தெரியாத தமிழக இளைஞர்களே இல்லை என்று சொல்லலாம். 

இந்தப் பாடலை முன்வைத்து கேரளாவின் ஐஎஸ்சி கல்லூரிப் பெண்கள் சிலர் ஆடிய வீடியோ சமூகவலைத்தளங்களில் மிக அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது. கேரளாவை விடவும் தமிழக இளைஞர்களிடையே இப்பாடலும் பெண்களின் நடனமும் அதிகக் கவனம் பெற்றுள்ளது. இது தொடர்பாக மீம்களும் அதிகமாக உலவுகின்றன. இப்பாடலில் பங்கேற்ற அக்கல்லூரி ஆசிரியரான ஷெரில் ஒரு கதாநாயகிக்கு உரிய அந்தஸ்தைப் பெற்றுள்ளார். முன்வரிசையில் இருந்து அவர் ஆடிய நடனத்துக்காகவே இந்த வீடியோ இந்தளவுக்கு வரவேற்பைப் பெற்றுள்ளது. இவருடைய பேட்டிகளும் வீடியோக்களும் சமூகவலைத்தளங்களில் அதிகமாக இடம்பெற்று வருகின்றன. தமிழகத்தில் புகழ் பெற்றுள்ளதால் தமிழ்ப் படத்தில் நடிக்கவும் ஆர்வமாக உள்ளதாக ஷெரில் பேட்டியளித்துள்ளார்.

இந்நிலையில் யூடியூப் இணையத்தளத்தின் கல்லூரி மாணவிகள் நடனமாடிய இந்த வீடியோ 1 கோடி பார்வைகளைத் தொட்டு சாதனை செய்துள்ளது. திரைப்பட நடிகர்கள் யாரும் பங்குபெறாத ஒரு வீடியோ, ஒரு கோடி பார்வைகளை அடைந்திருப்பது சாதாரண விஷயமல்ல. இந்நிலையில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாகும் என அறியப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com