மெட்ரோ ரயிலுக்காக 2010-லிருந்து காத்திருக்கிறோம்: புல்லட் ரயில் திட்டத்தை முன்வைத்து நடிகை கஸ்தூரி ஆதங்கம்!

ஆமதாபாத்-மும்பை இடையிலான இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்குள்...
மெட்ரோ ரயிலுக்காக 2010-லிருந்து காத்திருக்கிறோம்: புல்லட் ரயில் திட்டத்தை முன்வைத்து நடிகை கஸ்தூரி ஆதங்கம்!

குஜராத் மாநிலம் ஆமதாபாத்-மும்பை இடையிலான இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோர் வியாழக்கிழமை தொடங்கி வைத்தனர். ரூ.1.10 லட்சம் கோடி மதிப்பிலான இந்த கனவுத் திட்டத்தால் ஆமதாபாத்-மும்பை ஆகிய இரு நகரங்களுக்கு இடையிலான 500 கி.மீ.க்கு மேற்பட்ட தொலைவை மூன்று மணி நேரத்துக்குள் கடந்துவிட முடியும். அதாவது இப்போதுள்ள 7 மணி நேர பயண நேரம் 3 மணி நேரத்துக்குள்ளாகக் குறையும். 

ஜப்பான் இத்திட்டத்துக்காக ரூ.88,000 கோடியை 0.1 சதவீத வட்டியில் அளித்துள்ளது. கடந்த 1964-ஆம் ஆண்டு ஜப்பானில் புல்லட் ரயில் திட்டம் தொடங்கப்பட்டது. இப்போது 15 நாடுகள் புல்லட் ரயில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகின்றன. ஐரோப்பா முதல் சீனா வரை பல நாடுகளில் புல்லட் ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆமதாபாத்-மும்பை இடையிலான புல்லட் ரயில் திட்டம் 2022-ஆம் ஆண்டு நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் இத்திட்டம் குறித்த தனது கருத்தை நடிகை கஸ்தூரி ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். அவர் கூறியதாவது: 

ஆமதாபாத்-மும்பை இடையிலான இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் முடிவடைகிறதாம். சென்னையில் நாங்கள் 2010-லிருந்து மெட்ரோ ரயிலுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறோம். 2020-க்கு முன்பு முடிவடையுமா என்று ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார். 

பரங்கிமலை - நேரு பூங்கா, சின்னமலை - தேனாம்பேட்டை இடையிலான வழித்தடப் பணிகள் முடிவடைந்து, சென்னை மெட்ரோ ரயிலின் முழுமையான முதல் கட்ட போக்குவரத்து வரும் 2018 மார்ச் மாதம் பயன்பாட்டுக்கு வரும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் ராஜீவ் நாராயண் திவேதி நேற்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com