58 வருடங்களில் ஆஸ்கருக்கு மூன்று படங்களை மட்டுமே பரிந்துரைத்த பாகிஸ்தான்! திருப்புமுனை உண்டாக்குமா ‘சாவன்’! 

திரையுலகின் மோசமான சூழலால் 50 வருடங்கள் ஆஸ்கருக்கு எவ்வித பாகிஸ்தான் படமும் அனுப்பப்படவில்லை...
58 வருடங்களில் ஆஸ்கருக்கு மூன்று படங்களை மட்டுமே பரிந்துரைத்த பாகிஸ்தான்! திருப்புமுனை உண்டாக்குமா ‘சாவன்’! 

ஆண்டுதோறும் சர்வதேச அளவில் சிறந்த திரைப்படங்களுக்கு, திரையுலகின் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது. சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான பாகிஸ்தான் படமாக சாவன் (Saawan) என்கிற படம் தேர்வாகியுள்ளது.

பாலைவனப் பகுதிகளில் படமாக்கப்பட்ட இப்படத்தை மூத்த இயக்குநர் ஃபர்ஹான் அலம் இயக்கியுள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த மசூத் தயாரித்து, கதை உருவாக்கத்திலும் பணியாற்றியுள்ளார். 

இந்தப் படத்தின் தொகுப்பாளராக அசீம் சின்ஹா என்கிற இந்தியர் பணியாற்றியுள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த அமிர் இசிலா இசையமைத்துள்ளார். மேட்ரிட் திரைப்பட விழா உள்ளிட்ட பல திரைப்பட விழாக்களில் விருது பெற்றதால் இப்படம் பாகிஸ்தான் சார்பாக ஆஸ்கருக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 

1959 முதல் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான விருதுக்காக இந்தியப் படங்கள் அனுப்பப்படுகின்றன (இந்தியா 1957 முதல்). 1959, 1963 வருடங்களில் இரு படங்கள் அனுப்பப்பட்டன. அதன்பிறகு திரையுலகின் மோசமான சூழலால் 50 வருடங்கள் ஆஸ்கருக்கு எவ்வித பாகிஸ்தான் படமும் அனுப்பப்படவில்லை. பிறகு தேர்வுக்குழு உருவாக்கப்பட்டு 2013-ல் தனது மூன்றாவது படத்தை ஆஸ்கருக்கு அனுப்பியது பாகிஸ்தான். எனினும் இதுவரை எந்தவொரு பாகிஸ்தான் படமும் கடைசிக் கட்டம் வரை (டாப் 5) சென்றது கிடையாது. இந்நிலையில் இந்த வருடம் தேர்வான சாவன், அந்தக் குறையைப் போக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com