சிபிராஜ் நடிப்பில் த்ரில்லர் படமான 'சத்யா' செப்டம்பர் 27 அன்று வெளிவருகிறது!

சிபிராஜ் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் 'சத்யா'. தெலுங்கில் உருவான 'ஷணம்'
சிபிராஜ் நடிப்பில் த்ரில்லர் படமான 'சத்யா' செப்டம்பர் 27 அன்று வெளிவருகிறது!

சிபிராஜ் நடிப்பில் செப்டம்பர் 27 அன்று வெளிவரவிருக்கும் படம் 'சத்யா'. தெலுங்கில் உருவான 'ஷணம்' படத்தின் தமிழ் ரீமேக்காக பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இப்படத்தை இயக்கியுள்ளார். ரம்யா நம்பீசன், வரலட்சுமி, ஆனந்த் ராஜ், சதீஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அவரது கதாபாத்திரம் பேசப்படும் என்று இயக்குநர் கூறியிருக்கிறார்.

இந்தப் படத்தை சத்யராஜ் தயாரித்துள்ளார். அருண்மணி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு சைமன் இசையமைத்துள்ளார். த்ரில்லர் படமான 'சத்யா' செப்டம்பர் 27 அன்று வெளிவர உள்ளது.

இத்திரைப்படம் சிபிராஜுக்கும் திருப்புமுனையாக அமையும் என்கிறார்கள் படக்குழுவினர். சிபிராஜ் நடித்துள்ள 12 படங்களில் இதுவரை எந்தப் படத்திலும் அவர் தன் தோற்றத்தை மாற்றி நடிக்கவில்லை. ஆனால் சத்யாவில் இயக்குனரின் கோரிக்கைக்கு இணங்கி தன் லுக்கை மாற்றியுள்ளார் சிபிராஜ்.

கிரைம் த்ரில்லர் ஜானரில் உருவான இப்படம், தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற ‘ஷணம்’என்ற படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்குப் படமான ஷணத்தின் கதை இதுதான். அமெரிக்காவில் பொறுப்பான வேலை ஒன்றில் இருக்கும் ரிஷிக்கு தன் முன்னாள் காதலியிடமிருந்து போனில் அழைப்பு வருகிறது. அவசர அவசரமாக இந்தியா வந்து அவளைச் சந்திக்கிறான். ஆனால் அவளுக்கு திருமணமாகி ஒரு குழந்தையும் இருக்கிறது எனச் சொல்கிறாள். அந்த குழந்தையைத் தான் இப்போது காணவில்லை. குழந்தையைக் கண்டுபிடிக்கச் சொல்லி ரிஷியிடம் உதவி கேட்கிறாள். ஆனால், குழந்தை கடத்தப்பட்டதற்கான தடயம் எதுவும் இல்லை, கடைசியாக குழந்தை எங்கு இருந்தது என்ற தகவலும் இல்லாத நிலையில் அவன் மிகவும் குழம்பிப் போகிறான். அவளுக்கு அப்படியொரு குழந்தை இருந்ததற்கான அடையாளமாக இருப்பது குழந்தையின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஒன்று தான். ஆனாலும் அவன் காதலி மேல் இருக்கும் நம்பிக்கையில் குழந்தையைத் தேடிச் செல்லும் த்ரில்லர் கதைதான் இது.  

மற்ற படங்களை விட சிபிராஜின் இத்திரைப்படம் மிகவும் முக்கியமானது என்று கருதுகிறார். காரணம் அவரது ரசிகர்களை பெரும் எதிர்ப்பார்ப்புக்கு உள்ளாக்கியிருக்கும் இதன் டிரைலர்தான். சமீபத்தில் யூடியூப்பில் ஒரு மில்லியனுக்கு மேலான பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது. மேலும் `சத்யா’ டிரைலரைப் திரையுலக பிரபலங்களும் சிபிராஜ் மற்றும் படக்குழுவினரை டிவிட்டரில் பாராட்டியுள்ளனர்.  

`சத்யா’ படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் தொலைக்காட்சி கைப்பற்றியிருக்கிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com