ரஜினியின் 'காலா' படத்தில் நடிக்கும் நடிகையின் படம் ஆஸ்கருக்குப் பரிந்துரை!

நடிகை அஞ்சலி பாட்டீல், ரஜினியுடன் இணைந்து காலா படத்தில் நடித்துள்ளார்...
ரஜினியின் 'காலா' படத்தில் நடிக்கும் நடிகையின் படம் ஆஸ்கருக்குப் பரிந்துரை!

நடிகை அஞ்சலி பாட்டீல், ரஜினியுடன் இணைந்து காலா படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் அஞ்சலி நடித்துள்ள ஹிந்திப் படமான நியூட்டன் ஆஸ்கருக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

கபாலிக்குப் பிறகு பா.இரஞ்சித் இயக்கத்தில் காலா படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. நடிகர் தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனத்தின் சார்பில் இப்படத்தைத் தயாரிக்கிறார். தமிழ், இந்தி, தெலுங்கு என 3 மொழிகளில் இப்படம் உருவாகி வருகிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் ரஜினி, ஹூமா குரேஷி, சமுத்திரக்கனி, நானா படேகர், அஞ்சலி பாட்டீல் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். 

சர்வதேச அளவில் சிறந்த திரைப்படங்களுக்கு, திரையுலகின் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது. சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான பிரிவில் இந்தியாவின் சார்பாக 'நியூட்டன்' (Newton) என்கிற ஹிந்திப் படம் தேர்வாகியுள்ளது. 'நியூட்டன்' படத்தை அமித் மசுர்கர் இயக்கியுள்ளார். ராஜ்குமார் ராவ், பங்கஜ் திரிபதி, அஞ்சலி பாட்டீல் போன்றோர் நடித்துள்ளார்கள்.

இந்நிலையில் அஞ்சலி பாட்டீலின் படம் ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதால், காலா படக்குழுவினர் அஞ்சலிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com