ஆஸ்கருக்கான போட்டியில் பாகுபலி 2-வைப் பின்னுக்குத் தள்ளிய நியூட்டன்!

தெலுங்கிலிருந்து பாகுபலி 2 படமும் போட்டியிட்டுள்ளது. ஆனால் பல சர்வதேச விருதுகளை வாங்கியதோடு...
ஆஸ்கருக்கான போட்டியில் பாகுபலி 2-வைப் பின்னுக்குத் தள்ளிய நியூட்டன்!

அடுத்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகளுக்கான தேர்வுக் குழுவுக்கு இந்தியாவிலிருந்து 'நியூட்டன்' என்ற ஹிந்தி திரைப்படம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நியூட்டன், இந்திய அரசியலை விமர்சித்து எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

உலக அளவில் சிறந்தத் திரைப்படங்களுக்கு ஆஸ்கர் விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆஸ்கர் விருதுகளுக்கு உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்களும் அனுப்பி வைக்கப்படும். அந்தத் திரைப்படங்களை ஆஸ்கர் குழுவினர் ஆராய்ந்து, அவற்றை ஆஸ்கர் விருதுகளுக்கான தேர்வுப் பட்டியலுக்கு அனுப்பி வைப்பார்கள். பின்னர், அவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த படங்களுக்கு ஆஸ்கர் விருதுகள் வழங்கப்படும்.

இந்நிலையில், ஹிந்தி இயக்குநர் அமித் மசூர்கர் இயக்கியுள்ள 'நியூட்டன்' திரைப்படத்தை ஆஸ்கர் விருதுகளுக்கான தேர்வுக் குழுவுக்கு இந்தியத் திரைப்படக் கூட்டமைப்பு (ஃபிலிம் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா) அனுப்பி வைத்துள்ளது.

ஆஸ்கர் தேர்வுக் குழுவுக்கு பரிந்துரைப்பதற்காக இந்தியத் திரைப்படக் கூட்டமைப்புக்கு அனுப்பி வைக்கப்பட்ட 26 திரைப்படங்களுள் நியூட்டன் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் பொதுச் செயலர் சுப்ரான் சென் தெரிவித்தார்.

போட்டிக்கு வந்த 26 படங்களில் 12 படங்கள் ஹிந்தியில் எடுக்கப்பட்டவை. 5 மராத்தி, 2 தெலுங்கு, கன்னடம், வங்காளம், மலையாளம், ஒரு தமிழ்ப் படம் என பல மொழிகளில் இருந்தும் வந்த படங்களைப் பார்த்து, ஆராய்ந்து நியூட்டன் படத்தைத் தேர்வு செய்துள்ளார்கள். தெலுங்கிலிருந்து பாகுபலி 2 படமும் போட்டியிட்டுள்ளது. ஆனால் பல சர்வதேச விருதுகளை வாங்கியதோடு பதினான்கு தேர்வுக்குழு உறுப்பினர்களின் பாராட்டையும் பெற்றதால் நியூட்டன் படம் இறுதியில் தேர்வானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com