தெலுங்கில் ரீமேக் ஆகிறது 'குரங்கு பொம்மை'

இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விதார்த், பாரதிராஜா, டெல்னா டேவிஸ்,
தெலுங்கில் ரீமேக் ஆகிறது 'குரங்கு பொம்மை'

இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விதார்த், பாரதிராஜா, டெல்னா டேவிஸ், குமரவேல், பாலா சிங், கிருஷ்ணமூர்த்தி, பி.எல்.தேனப்பன் ஆகியோர் நடிப்பில் உருவான படம் ‘குரங்கு பொம்மை’. பேராசைக் காரணமாக கொலையை துளியும் இரக்கம் இல்லாமல் செய்யத் துணிந்த ஒருவனையும், வாழ்க்கையில், வேலையில் திருப்தியும், மனநிறைவும் கொண்டு வாழும் எளிமையாக வாழும் மற்றொருவனைச் சுற்றி நடக்கும் க்ரைம் த்ரில்லர் ஜானர் படம்தான் 'குரங்கு பொம்மை.'

இந்தப் படத்தின் நாயகன் விதார்த். அவரது தந்தையாக இயக்குனர் பாரதிராஜா நடித்துள்ளார். படம் வெளிவந்த சமயத்தில் இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. தமிழில் இந்தப் படம் செப்டம்பர் 1-ம் தேதி வெளிவந்தது. இந்தப்படத்திற்கு அஜ்னேஷ் லோக்நாத் இசையமைத்திருந்தார். படத்தை ஸ்ரேயா ஸ்ரீ மூவீஸ் தயாரித்திருந்தது. இந்த நிலையில் ‘குரங்கு பொம்மை’ படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய எஸ் போக்கஸ் என்ற நிறுவனம் உரிமத்தை வாங்கி இருக்கிறது.  இது குறித்தி அந்நிறுவன உரிமையாளர் எம்.சரவணன் கூறுகையில், ‘இயக்குனர் நித்திலன் திறமையான இயக்குனர். திறமையான படைப்பாளிகளிக்கும், தரமான படங்களுக்கும் ஆதரவு தருவது எங்கள் முக்கிய நோக்கம்’ என்றார்

மேலும் அவர் கூறுகையில், ‘குரங்கு பொம்மை’ படம் போன்ற நல்ல கதைகளுக்கு மொழி எல்லைகளே கிடையாது. தெலுங்கு சினிமா வணிகம் இதற்கு ஆதரவு தரும். தெலுங்கு சினிமா ரசிகர்களுக்கும் நிச்சயம் இந்தப் படம் பிடிக்கும் என நம்புகிறேன்’என்கிறார் எம். சரவணன்.

இப்படத்தில் விதார்த் நடித்த வேடத்தில் புதுமுகம் நடிக்கவிருக்கிறாராம். பாரதிராஜா வேடத்தில் நடிக்க ஒரு பழம்பெரும் இயக்குனர் மற்றும் நடிகரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகத் தகவல்கள் வெளி வந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com