டி.ஆர். - தன்ஷிகா விவகாரத்தில் அமைதி காத்தது ஏன்? நடிகர் கிருஷ்ணா விளக்கம்!

நகைச்சுவையாக ஆரம்பித்தது, பிறகு தீவிரமாகி, மனத்தைப் புண்படுத்தும் அளவுக்குச் சென்றது. எல்லாம் மிக வேகமாக நடந்துவிட்டன...
டி.ஆர். - தன்ஷிகா விவகாரத்தில் அமைதி காத்தது ஏன்? நடிகர் கிருஷ்ணா விளக்கம்!

டி.ஆர். - தன்ஷிகா விவகாரத்தில் தான் அமைதி காத்தது ஏன் என நடிகர் நடிகர் கிருஷ்ணா விளக்கம் அளித்துள்ளார்.

எழுத்தாளர் மீரா கதிராவன் இயக்கும் ‘விழித்திரு’ படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் படக்குழுவினருடன் டி.ராஜேந்தர், தன்ஷிகாவும் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய தன்ஷிகா டி.ராஜேந்தர் பெயரை குறிப்பிட மறந்துவிட்டார். இதையடுத்து பேச வந்த டி.ராஜேந்தர் தன்னுடைய அடுக்கு மொழியில் சபை நாகரீகம் தெரியவில்லை என நடிகை தன்ஷிகா குறித்து பேச மேடையிலேயே தன்ஷிகா சிறிது நேரம் கண் கலங்கினார். இந்தச் சம்பவம் தமிழ்த் திரையுலகிலும் சமூகவலைத்தளங்களிலும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

தன்ஷிகாவைக் கண்டித்து பேசிய டி.ராஜேந்தருக்கு விஷால் கண்டனம் தெரிவித்துள்ளார். மேடையில் இந்த இயக்குநர் வெங்கட் பிரபுவும் தன்னுடைய விளக்கத்தை அளித்துள்ளார்.

இந்நிலையில் மேடையில் இருந்த நடிகர் கிருஷ்ணாவும் தன்னுடைய விளக்கத்தை அளித்துள்ளார். அவருடைய அறிக்கையில் கூறியதாவது: 

சுய மரியாதை கொண்டவனாக, ஒழுக்க விதிகளைக் கடைப்பிடித்து வாழும் என்னை, மேடையில் அமைதி காத்த காரணத்துக்காகத் தவறாக எண்ணிவிட வேண்டாம். நகைச்சுவையாக ஆரம்பித்தது, பிறகு தீவிரமாகி, மனத்தைப் புண்படுத்தும் அளவுக்குச் சென்றது. எல்லாம் மிக வேகமாக நடந்துவிட்டன. அந்தச் சமயத்தில் எங்களால் எதுவும் செய்திருக்கமுடியாது. என் கருத்து என்னவென்றால், அன்று மேடையில் இருந்த எல்லோரும் இதை ஒப்புக்கொள்வார் என எண்ணுகிறேன், டி.ஆர். போன்ற மூத்த நடிகரின் பேச்சைக் குறுக்கீடு செய்வது மேடை நாகரிகமாக இருக்காது. ஆனால் தொடர்ந்து அவர் தன்ஷிகாவை அவமரியாதை செய்தது ஏற்றுக்கொள்ளமுடியாதது. நியாயப்படுத்தவும் முடியாது. ஆணோ பெண்ணோ யாருக்கு நேர்ந்திருந்தாலும் அவமரியாதைதான். எங்களில் யாராவது ஒருவர் அந்தச் சமயத்தில் அவர் பேச்சுக்கு ஆட்சேபம் தெரிவித்திருந்தால் விளம்பர நிகழ்ச்சியில் தேவையில்லாத வாக்குவாதங்கள் உண்டாகியிருக்கும். மூத்த நடிகர்கள், இளைய நடிகர்களை மன்னித்து அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்ய முன்வருவார்கள் என எண்ணுகிறேன். நாம் தான் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்ளமுடியும் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com