கோலிவுட், சாண்டல்வுட்டை விட பாலிவுட் எவ்வளவோ மேல்! நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் பேட்டி!

நடிகர் மாதவனுக்கு ஜோடியாக ‘விக்ரம் வேதா’ படத்தில் நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத்தை தமிழ் ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.
கோலிவுட், சாண்டல்வுட்டை விட பாலிவுட் எவ்வளவோ மேல்! நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் பேட்டி!

நடிகர் மாதவனுக்கு ஜோடியாக ‘விக்ரம் வேதா’ படத்தில் நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத்தை தமிழ் ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். ‘காற்று வெளியிடை’ படத்தில் ஸ்ரீநாத் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார் ஷரத்தா. அண்மையில் நிவின் பாலியுடன் ‘ரிச்சி’ படத்தில் நடித்துள்ளார்.

தற்போது ‘மிலன் டாக்கீஸ்’ என்ற இந்திப் படத்தில் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் அறிமுகமாகிறார். இதுதான் பாலிவுட்டில் அவர் நடிக்கும் முதல் படம். இந்தப் படத்தை திக்மன்ஷு துலியா இயக்குகிறார். இதில், அலி பஸல் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு லக்னோவில் வெற்றிகரமாக முடிந்துள்ளது.

பாலிவுட் சினிமா உலகம் குறித்து ஷரத்தா கூறுகையில், ‘நான் மிலன் டாக்கீஸில் படத்தில் கல்லூரி மாணவியாக நடிக்கிறேன். பாலிவுட் தென்னிந்திய திரை உலகை விட சில விஷயங்களில் பாராட்டும்படியாக உள்ளது. முக்கியமாக தொழில்முறையில் அவர்கள் சில ஒழங்குகளைக் கடைப்பிடிக்கிறார்கள். டிசிப்ளின் மற்றும் புரொஃபஷனால இருப்பது முக்கியம் என நினைக்கிறார்கள். இந்த விஷயத்தில் ஒவ்வொரு திரைப்பட நிறுவனங்கள் மாறுபடலாம். 

என்னைப் பொருத்தவரையில் நான் நடிக்க வந்த பின், இந்திப் படங்களில் நடிப்பேன் என நினைக்கவில்லை. அதனால் இப்போது பாலிவுட்டில் நடிப்பது திரைப்பட பயிற்சி எடுத்துக் கொள்வது போல் உள்ளது. ஒரு பயிற்சி மாணவி போலத்தான் உணர்கிறேன். அவ்வகையில் இப்போது நிறைய கற்றுக் கொள்ள முடிகிறது’ என்றார் ஷ்ரத்தா.

தென்னிந்திய திரையுலகில் ஷரத்தா யு டர்ன், உர்வி, விக்ரம் வேதா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். ஷரத்தா இந்தி நன்றாக பேசுகிறார். அதற்கு காரணம் அவர் வட இந்தியாவில் வளர்ந்தவர். அவரது தந்தை ஆர்மியில் பணிபுரிந்தவர். தாய்மொழி கன்னடமாக இருந்தாலும் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளை பேசத் தெரியும்.

மிலன் டாக்கீஸ் படத்தில் கல்லூரி மாணவியாக நடிக்கிறார். இது முழுக்க முழுக்க காதல் கதை. இப்படி ஒரு புத்தம் புது காதல் கதையில் நடிப்பது இதுவே அவருக்கு முதல் முறையாம். காதல் காட்சிகளை அழுத்தமாக சொல்ல மாண்டேஜ் வகையில் ஹீரோ ஹீரோயினுக்கு பாடல்களை வைக்கலாம், ஆனால் மிலன் டாக்கீஸ் வேற லெவல் என்று புகழ்ந்து தள்ளுகிறார்.

இந்தப் படத்தில் அவருடன் ரீச்சா சின்ஹா, அஷுடோஷ் ராணா, சஞ்சய் மிஸ்ரா, யஷ்பால் ஷர்மா, சிகந்தர் கேர், தீப் ராஜ் ராணா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com