ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சூனியம் வைத்தது போலுள்ள தமிழகம்: நடிகர் சிம்பு கருத்து! 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தமிழகம் ஏதோ சூனியம் வைத்தது போலுள்ளது என்று நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சூனியம் வைத்தது போலுள்ள தமிழகம்: நடிகர் சிம்பு கருத்து! 

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தமிழகம் ஏதோ சூனியம் வைத்தது போலுள்ளது என்று நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி விரைவில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும் திரையுலகினரின் மவுன போராட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஞாயிறு  காலை நடைபெற்றது.

இதில் நடிகர் சங்க தலைவர் நாசர், ரஜினி, கமல், விஜய், விக்ரம், கார்த்தி, சிவகுமார்.சூர்யா, சிவகார்த்திகேயன், ராஜேஷ், சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். குறைவான எண்ணிக்கையில் நடிகைகள் கலந்து கொண்டனர். காவல்துறை அனுமதியின்படி இந்த போராட்டம் மதியம் 1 மணி வரை மட்டும் நடைபெற்றது.

இந்த மவுன போராட்டத்தில் அஜித் குமார், பிரகாஷ் ராஜ், சிம்பு, டி.ராஜேந்தர், சரத்குமார், ராதாரவி, சேரன், வடிவேலு, தமன்னா, திரிஷா உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை. இந்நிலையில் மதியம் நடிகர் சிம்பு தனது தி.நகர் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:

திரைத்துறையினர் நடத்திய போராட்டத்துக்கு எனக்கு அழைப்பு இல்லை.  திரைத்துறையில் பல பிரச்சினைகள் உள்ள போது, காவிரி - ஸ்டெர்லைட்டுக்காக போராடுவது எனக்கு புரியவில்லை. இங்கு மக்களுக்கு நீர் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் இல்லை.  காவிரி பிரச்சனையை வைத்து அரசியல் கட்சியினர், அவரவருக்கு ஏற்ற வகையில் அரசியல் செய்து வருகின்றனர்.

ஐ.பி.எல் போட்டியை புறக்கணிக்க வேண்டும் என்பது நியாயமான ஒன்றுதான். தமிழக மக்கள் மீது குறிப்பாக சென்னை மக்கள் மீது தோனி மிகுந்த அன்பு கொண்டவர்.  எனவே அவர் காவிரிக்கான போராட்டத்திற்கு ஏதாவது ஒரு வகையில் ஆதரவு அளிக்க வேண்டும். ஐ.பி.எல் போட்டி நடந்தால் கருப்பு சட்டை அணிந்து எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என அப்துல் கலாம் ஆன்மா கூறியது. எங்களை மட்டும் போட்டி நடக்கும் மைதானத்திற்குள் விட்டுப் பாருங்கள். மீதியை நாங்கள் கவனித்துக் கொள்வோம்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சூனியம் வைத்ததுபோல்தான் தமிழகம் உள்ளது. தொடர்ந்து பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றன. அதில் என்ன நடந்தது என்பது முதலில் தெரிய வேண்டும்.  

இவ்வாறு அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com